இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. பிசிசிஐ மாஸ் ஏற்பாடு.. நட்சத்திர வீரர்களுக்கு சிக்கல்.. சிறப்பான நகர்வு

0
313
ICT

இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது வீரர்களுக்கு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. மேலும் அடுத்தடுத்து விளையாடும் டெஸ்ட் போட்டிகளுக்கு மீண்டும் பழைய முறையில் சில புதிய திட்டங்களை கொண்டு வர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.

இந்திய அணி கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களில் படுதோல்வி அடைந்தது இந்திய கிரிக்கெட்டுக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதைவிட பெரிய விஷயமாக வீரர்கள் இடையே ஒற்றுமை இல்லை என்கின்ற தகவல்கள் பரவி வருகிறது. இது இந்திய கிரிக்கெட் வாரியத்தை மிகவும் கவலை அடைய வைத்திருக்கிறது.

- Advertisement -

காணாமல் போன பழைய முறை

இந்திய அணி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் பொழுது தேவையான அளவுக்கு பயிற்சி போட்டிகள் வாங்கப்படும். இதன் மூலம் வீரர்கள் அங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு பழகுவதோடு ஆடுகளத்தன்மைக்கும் பழகுவார்கள். இது அவர்களுக்கு பெரிய அளவில் உதவி செய்து வந்தது.

இப்படியான நிலையில் பயிற்சி போட்டியில் விளையாடும் பொழுது காயம் அடையும் ஆபத்து இருக்கின்ற காரணத்தினால் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் திடீரென பயிற்சி போட்டிகளை வெளியில் நிறுத்தியது. தற்போது மீண்டும் பழைய முறையில் பயிற்சி போட்டிகளை நடத்தி தகுதியான வீரர்களை கண்டறிவதற்கு திட்டங்கள் கொண்டுவரப்பட இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

- Advertisement -

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் புதிய ஏற்பாடு

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மே 25ஆம் தேதிக்குள் முடிவுக்கு வந்துவிடும். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஜூன் இருபதாம் தேதி ஆரம்பிக்கிறது. நடுவில் 25 நாட்கள் இடைவெளி இருக்கிறது. இந்த 25 நாட்கள் இடைவெளியில் இங்கிலாந்து ஏ அணியான இங்கிலாந்து லயன்ஸ் அணி உடன் நான்கு நாட்கள் கொண்ட மூன்று பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ 6 அதிரடி உத்தரவு.. மீறினால் கடுமையான தண்டனை.. வெளியான செய்தி

இந்த மூன்று பயிற்சி டெஸ்ட் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்திய வீரர்களை தேர்வு செய்யப்படும் என்றும் தெரிகிறது. எனவே இதன் காரணமாக இந்திய நட்சத்திர வீரர்கள் நேரடியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்று விட முடியாது என்பது தெளிவாகி இருக்கிறது. கிரிக்கெட் வல்லுனர்களும் பிசிசிஐயின் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -