ஐபிஎல் 2025

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்.. ஆஸி அணி அறிவிப்பு.. ஸ்மித்தின் பரிதாப நிலைமை.. புது ஆல் ரவுண்டர் சேர்ப்பு

அடுத்து துவங்க இருக்கும் நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் ஆஸ்திரேலியா அணி தனது முதல் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. தற்போது இதற்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி இந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் முதலில் துவங்கும் டெஸ்ட் தொடருக்கு ஆஸ்திரேலியா அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சுற்றுப் பயண அட்டவணை

ஆஸ்திரேலியா அணியின் இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 25, ஜூலை 3 மற்றும் ஜூலை 13ஆம் தேதிகளில் பார்படாஸ், கிரேனடா மற்றும் ஜமைக்கா ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இதற்கு அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 21, 23, 26, 27 மற்றும் 29ஆம் தேதிகளில் நடைபெற்று ஆஸ்திரேலியா அணியின் சுற்றுப்பயணம் முடிவுக்கு வருகிறது. ஆஸ்திரேலியா அணி நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் முதல் தொடரை வெளியில் விளையாடுவதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் ஆகிறது.

- Advertisement -

ஸ்மித் பரிதாப நிலைமை

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியா அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. வேகப் பந்துவீச்சாளர் ப்ரண்டன் டக்கட் காயமடைந்ததால் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சீன் அப்பாட் சேர்க்கப்பட்டிருக்கிறார். மேலும் இளம் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதே சமயத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கைவிரலில் காயமடைந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மித் காயத்துடனேயே அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மிச்சல் மார்ஸ்க்கு இடம் கொடுக்கப்படவில்லை.

இதையும் படிங்க : விராட் கோலி என்னிடம் சில மாதம் பேசாமல் இருந்தார்.. நான் செய்தது மிகப் பெரிய தவறு.. டிவில்லியர்ஸ் விளக்கம்

ஆஸ்திரேலியா அணி : பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மாட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசேன், நாதன் லியோன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் மற்றும் பியூ வெப்ஸ்டர்

- Advertisement -
Published by