தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஜாம்பவான் டிவில்லியர்ஸ் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். அண்மையில் நடந்த ஐபிஎல் இறுதி போட்டிகள் கூட ஆர் சி பி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
அப்போது டிவில்லியர்ஸ் உடன் இணைந்து கோப்பையை வாங்க வேண்டும் என்று விராட் கோலி கூறியிருந்தார்.இவ்வளவு நெருக்கமாக இருந்த விராட் கோலி டிவில்லியர்ஸ் உடன் சில மாதங்கள் பேசாமல் இருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து பேசிய டிவில்லியர்ஸ், “விராட் கோலி என்னுடன் பேசுவதையே சில மாதம் நிறுத்திவிட்டார்.”
பேசுவதை நிறுத்திவிட்டார்:
“தற்போது இரண்டாவது குழந்தை பிறகு தான் அவர் நல்ல வேலையாக என்னுடன் மீண்டும் பேச தொடங்கினார்.இதற்குக் காரணம் விராட் கோலி தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை யாரிடம் சொல்லாமல் இருந்தார். ஆனால் நான் அதை வெளியில் சொல்லிவிட்டேன்.”
“அதன் பிறகு விராட் கோலி என்னிடம் பேசுவதையும் நிறுத்தி விட்டார் என்று டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
மேலும் விராட் கோலி ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் சில கடினமான கட்டத்தை அவர் கடந்தார். நானும் இது போன்ற தருணங்களை எனது வாழ்க்கையில் சந்தித்து இருக்கின்றேன்.இதனால் அவர் என்ன யோசித்து இருப்பார் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.”
அணியில் இருக்கும் அரசியல்:
“விராட் கோலியின் வயது, அணியில் இருக்கும் நிலைமை மற்றும் அரசியல் இது அனைத்தும் அவருக்கு கடும் நெருக்கடியை கொடுத்து இருக்கும்.இதனால்தான் அப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருப்பார். ஆனால் இன்னும் அவர் கிரிக்கெட் விளையாடி வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.”
இதையும் படிங்க: கனவிலும் கேப்டன் ஆவேன் என நினைக்கவில்லை.. சுப்மன் கில் பேச்சு.. எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை
“நான் எப்போதுமே என்னுடைய 100 சதவீத ஆதரவை விராட் கோலிக்கு வழங்குவேன்” என்று டிவில்லியர்ஸ் கூறினார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு நடைபெற்ற போது விராட் கோலி அந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. இதற்கான காரணத்தை முதலில் டிவில்லியர்ஸ் வெளியே கூறினார். அதன் பிறகு நான் சொன்னது தவறான விஷயம் என்று அவர் மீண்டும் வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டு இருந்தார்.






