நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு ஆஸ்திரேலியா அணி புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. தற்போது இந்த தொடருக்கு மற்ற எந்த அணிகளையும் விட ஆஸ்திரேலியா அணி பலவிதமான பரிசோதனை முயற்சிகளை செய்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை வென்று பலத்தை நிரூபித்தது. இதைத் தொடர்ந்து தங்களது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரையும் வென்றது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அக்டோபர் 1, 3 மற்றும் 5ஆம் தேதிகளில் விளையாடுகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மிட்சல் ஸ்டார்க் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்திருக்கிறார். மொத்தமாக இந்த மூன்று டி20 தொடர்களிலும் ஆஸ்திரேலியா அணி பலவிதமான பரிசோதனை முயற்சிகளை செய்து வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் நான்கு வீரர்களை மாற்றி பரிசோதிக்கிறது.
தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் ஆஸ்திரேலியா டி20 அணிக்கு கேப்டனாக மிட்சல் மார்ஸ் இருக்கிறார். மேலும் தற்போது ஆஸ்திரேலியா அணியில் கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லீஸ் மற்றும் ஆரோன் ஹார்டி ஆகியோர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு பதிலாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ ஷார்ட், மிட்சல் ஓவன் மற்றும் சேவியர் பார்ட்லெட் ஆகியோர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க : கவாஸ்கரை வைத்துக் கொண்டே பதிலடி கொடுத்த பிராட் ஹேடின்.. கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சுவாரசியம்
மிட்செல் மார்ஷ் (கே), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் (விகீ), மேட் குஹ்னெமன், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா.