கவாஸ்கரை வைத்துக் கொண்டே பதிலடி கொடுத்த பிராட் ஹேடின்.. கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சுவாரசியம்

0
29
Haddin

இந்திய கிரிக்கெட் லெஜன்ட் சுனில் கவாஸ்கர் வெளிநாட்டு வீரர்கள் இந்திய கிரிக்கெட் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதற்கு அவரை மேடையில் வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவின் பிராட் ஹேடின் பதிலடி கொடுத்திருக்கிறார்.

பிராட் ஹேடின் பஞ்சாப் கிங்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக இருந்து வருகிறார். அவர் ஆசிய கோப்பை இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது தமக்குப் பெரிய அதிர்ச்சியை கொடுத்ததாகவும் இது சரியானது கிடையாது எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.

- Advertisement -

சுனில் கவாஸ்கர் மோதல்

இந்த நிலையில் இந்தியா லெஜன்ட் கிரிக்கெட்டர் சுனில் கவாஸ்கர் வெளிநாட்டு வீரர்கள் இந்திய கிரிக்கெட் குறித்து கருத்து தெரிவிக்க கூடாது என்றும், அவர்களுக்கு இந்திய கிரிக்கெட்டின் சூழ்நிலை என்னவென்று தெரியாது, அவர்கள் அவர்களுடைய நாட்டு கிரிக்கெட் பற்றி பேச வேண்டும் என்றும் கடுமையாக தெரிவித்து இருந்தார்.

மேலும் இந்திய வீரர்கள் எப்பொழுதும் அடுத்த நாட்டு கிரிக்கெட் விஷயங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை, ஆனால் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டு அணி தேர்ந்தெடுக்கப்படும் பொழுது, மிகவும் சிறப்பாக இருப்பது போல எதுவும் பேசுவதில்லை, இந்திய அணியின் தேர்வு குறித்து எப்பொழுதும் விமர்சனம் செய்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

பிராட் ஹேடின் பதிலடி

இது குறித்து பிராட் ஹேடின் பேசும்பொழுது ” இந்த நிகழ்ச்சியை சுனில் கவாஸ்கர் அவர்களும் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. உலக கிரிக்கெட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து கருத்து தெரிவிப்பதே எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் வேலை. அதைத்தான் நாங்கள் செய்கிறோம். ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பஞ்சாப் அணியில் நான் பயிற்சி அளித்தேன். அவர் இந்திய அணியில் இல்லாதது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த கருத்தில் நான் எப்பொழுதும் மிகவும் உறுதியாக இருக்கிறேன்”

இதையும் படிங்க : இவரு வேற மாதிரி கிரிக்கெட்டர்.. 2027 உலக கோப்பைக்கு பலே ஸ்கெட்ச்.. முக்கிய முடிவை வெளியிட்ட ஆஸி மிச்சல் ஸ்டார்க்

“ஏனென்றால் அவர் பஞ்சாப் அணியில் ஒரு பேட்ஸ்மேனாக மற்றும் கேப்டனாக அழுத்தமான நேரத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவர் சிறந்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார். அப்படிப்பட்ட ஒரு வீரர் அணியில் இல்லாத போது அது எனக்கு சரியானதாக தோன்றவில்லை. அதே சமயத்தில் அவர் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அணியும் நல்ல முறையிலேயே இருக்கிறது என்று கூறினார்.

- Advertisement -