இந்தியாவை வீழ்த்த ஸ்பெசல் ஏற்பாடு .. ஆஸி அணியின் பலே பிளான்

0
487

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த 17 ஆண்டுகளாக இந்திய மண்ணின் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆனால் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து இரண்டு தொடரை வென்று அசத்தி இருக்கிறது. இதனால் பதிலடி தர வேண்டிய உத்வேகத்த ஆஸ்திரேலிய அணி உள்ளது.

- Advertisement -

இந்தியாவை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது என்பதை உணர்ந்துள்ள ஆஸ்திரேலியா இம்முறை  4 சுழற்பந்துவீச்சாளர்களுடன்  வந்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவரும் நல்ல பார்மில்  இருப்பதால் தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்திய ஆடுகளத்திற்கு ஏற்ற வகையில் தங்களது ஆட்டத்தை மாற்றிக் கொள்வதற்காக ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி ஒன்றாம் தேதி இந்தியா வருகிறார்கள்.

பிப்ரவரி 2ஆம் தேதி முதல் பெங்களூருவில் முகாமிட்டு பயிற்சி செய்யும் ஆஸ்திரேலியா அணி நாக்பூர் மைதானத்திற்கு போட்டிக்கு இரண்டு நாள் முன்பு தான் சொல்ல இருக்கிறார்கள். இந்திய மைதானங்களில் விளையாடுவதற்கு பயிற்சி செய்ய இரண்டு அல்லது மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்க வேண்டும் என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கோரிக்கை விடுத்து இருந்தார். இதனால் தங்களுக்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏதேனும் ஒரு அணியை தயார் செய்து கொடுங்கள் என்று பிசிசிஐ யிடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கேட்டிருக்கிறது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்திய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள ஆயத்தமாகும். இதனிடையே இந்தத் தொடர் குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தன் வாழ்நாளில் அடுத்த 10 டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார். நான் சிறந்த ஆஸ்திரேலிய அணி கேப்டனாக இருப்பதிலிருந்து இது சிறிது நாளில் மோசமான அணியின் கேப்டனாக கூட மாறிவிடலாம். அப்படி நடக்காமல் இருக்க எங்களுடைய நூறு சதவீதம் உழைப்பை திறமையை வெளிப்படுத்த வேண்டும் என பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

- Advertisement -