ஆஸ்திரேலியா எடுத்த தடாலடி முடிவு.. 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய கம்மின்ஸ்

0
120

இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் கடைசி இன்னிங்ஸில் பேட்டிங் செய்து ரன்களை சேஸ் செய்வது மிகவும் கடினம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் ஆஸ்திரேலியா அணியில் இந்தியாவை காப்பி அடித்து மூன்று சுழற் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கி இருக்கிறார்கள். ஸ்டார்க் ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அணிக்கு திரும்பவில்லை. இதே போன்று கேமரான் கிரீனும் இன்றைய ஆட்டத்தில் இடம்பெறவில்லை. பேட்டிங்கில் ரீன்ஷாவுக்கு பதில் டிராவிஸ் ஹேட் விளையாடுகிறார்.

ஆஸ்திரேலிய அணி முன் எப்போதும் போல் இல்லாத வகையில் ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளர் மற்றும் மூன்று சுழற் பந்துவீச்சாளர் உடன் விளையாடுகிறது. இது அந்த அணிக்கு கை கொடுக்குமா என தெரியவில்லை. இந்திய அணியை பொறுத்தவரை கே எல் ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.சூரியகுமார் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டு அந்த இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குகிறார்.

இந்திய அணியே இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடும் நிலையில் ஆஸ்திரேலிய அணி ஒரு பவுலருடன் விளையாடுவது கைகொடுக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியாவில் கொஞ்சம் அதிரடியாக விளையாடி வருகிறது.

- Advertisement -