இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் கட்டாக் நகரத்தின் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய பிளேயிங் லெவல் எவ்வாறு அமையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
ஸ்ரேயாஸ் சொன்ன சூசக தகவல்
நேற்றைய போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர் விராட் கோலி விளையாடாத காரணத்தினால் மட்டுமே தனக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறியிருந்தார். இதன் மூலம் இந்திய அணி நிர்வாகம் ஜெய்ஸ்வாலை துவக்க ஆட்டக்காரராக விளையாட விரும்புகிறது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
இந்திய அணி நிர்வாகம் சாம்பியன்ஸ் டிராபிக் முன்பாக ஜெய்ஸ்வாலை விளையாட வைக்க விரும்புவது உறுதி என்பதால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி வரும் பட்சத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படுவார் என்பது உறுதி. தற்போதைய நிலையில் விராட் கோலி விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்பட்டு வருகிறது. எனவே ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு ஜெய்ஸ்வால் தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம்.
வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா?
வருண் சக்கரவர்த்தியை சாம்பியன்ஸ் டிராபிக்கு அழைத்துச் செல்லலாமா என்று பரிசோதிப்பதற்காகவே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் போட்டியில் காயத்திலிருந்து திரும்பி வந்த குல்தீப் யாதவ் விளையாடி போட்டியையும் வென்று விட்டதால், இரண்டு போட்டிகளில் வருண் சக்கரவர்த்தியை விளையாட வைத்து பரிசோதிக்க வாய்ப்புகள் மிக அதிகம்.
அதே சமயத்தில் பும்ரா உடல் தகுதி பெறாவிட்டால் இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் தேவை என்பதால் அடுத்த போட்டியிலும் ஹர்ஷித் ராணாவுக்கே வாய்ப்பு தரப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் வெளியில் உட்கார வைக்கப்படலாம்.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி.. அரையிறுதிக்கே பாகிஸ்தான் வரமாட்டாங்க.. இந்த 4 அணிகளுக்கு தான் வாய்ப்பு – ஜாகிர் கான் கருத்து
இந்திய பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் சுப்மன் கில், விராட் கோலி, கேஎல்.ராகுல், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, முகமது ஷமி மற்றும் வருண் சக்கரவர்த்தி.






