வீடியோ: அச்சுஅசலாக அஸ்வின் போல பந்துவீசும் இளம் வீரர்; அவரை பயிற்சி பவுலராக உள்ளே எடுத்து ப்ராக்டீஸ் செய்யும் ஆஸி., பேட்ஸ்மேன்கள்!

0
932

அச்சுஅசலாக அஸ்வின் போலவே பந்துவீசும் இளம்வீரரை பயிற்சி பவுலராக எடுத்து தீவிரமாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு வந்திருக்கிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடக்க உள்ளது.

- Advertisement -

இதுவரை இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை. கடந்த முறை வந்த போதும் தொடரை இழந்து வெளியேறினர். கடைசி இரண்டு முறை ஆஸ்திரேலியாவிற்கு சென்று இரண்டு டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி புதிய வரலாறும் படைத்திருக்கிறது இந்திய அணி.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நோக்கில் ஆஸ்திரேலியா அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வந்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக இந்திய மைதானத்தில் சுழல்பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரவிச்சந்திரன் அஸ்வினின் பவுலிங்கை எதிர்கொள்வதற்கு என்று பிரத்தியேகமாக ரவிச்சந்திரன் அஸ்வின் போன்று பந்துவீசி வரும் “குட்டி அஸ்வின்” என்று செல்லமாக அழைக்கப்பட்டு வரும் வீரரை பயிற்சி பவுலராக உள்ளே எடுத்து ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

முக்கியமாக ஸ்டீவ் ஸ்மித் நுணுக்கத்துடன் பயிற்சி செய்து வருகிறார். ஸ்மித் பயிற்சி செய்து வரும் இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த பாடல் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கும் மிகவும் முக்கியமாகும். ஏனெனில் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் மட்டுமே இந்திய அணியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும். ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே தகுதி பெற்று பைனலுக்கும் சென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.