U19 உலககோப்பை பைனல்.. 36 வருட வரலாறு.. இந்திய பவுலர் மற்றும் ஆஸி அணி புதிய சாதனை

0
331
U19wc

இன்று தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அண்டர் 19 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் தற்பொழுது பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா ஆச்சரியப்படுத்தும் விதமாக பேட்டிங்கை தேர்வு செய்தது

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர் டிக்ஸன் மிகச் சிறப்பாக விளையாடி முதலில் 42 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் வெயிப்ஜென் 48 ரன் எடுத்து வெளியேற ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்ஜாஸ் சிங் முதலில் பொறுமை காட்டி பின்பு அதிரடியில் மிரட்ட நெருக்கடி இந்தியாவின் பக்கம் திரும்பியது.

சிறப்பாக விளையாடிய அந்த வீரர் 63 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 55 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணியும் வலிமையான இடத்தில் வைத்திருந்தார்.

- Advertisement -

இந்த நேரத்தில் இந்திய கேப்டன் உதய் சகரன் தன்னுடைய பிரைம் பந்துவீச்சாளர் இடது கை சுழல் பந்து வீச்சாளர் சௌமை பாண்டேவை கொண்டு வந்தார். இதற்கு கை மேல் பலனாக ஹர்ஜாஸ் சிங் விக்கெட் கிடைத்தது.

இதன் மூலம் 36 வருட 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடரில் சவுமை பாண்டே புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அவர் மொத்தம் இந்தத் தொடரில் 18 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

இதன் மூலம் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பையில் ஒரு தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளராக அவர் மாறி இருக்கிறார். இதற்கு முன்பு 2020 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையில் ரவி பிஸ்னாய் 17 விக்கெட் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

இதையும் படிங்க : INDvsENG.. இங்கிலாந்து நட்சத்திர வீரர் மொத்தமாக டெஸ்ட் தொடரில் இருந்து ரூல்ட் அவுட்

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்திருக்கிறது. இதன் மூலம் அண்டர் 19 இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட மிக அதிகபட்ச ரன் ஆகவும் இது பதிவாகி இருக்கிறது. இந்த வகையில் ஆஸ்திரேலியா அணியும் 36 வருடத்தில் புது சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.