இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் பெர்த் மைதானம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி
இந்திய கிரிக்கெட் அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட உள்ள நிலையில் சில வாரங்களுக்கு முன்பாக ஆஸ்திரேலியா வந்த இந்திய அணி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் வருகிற முதல் டெஸ்ட் போட்டி 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானம் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும். வேகப்பந்துவீச்சை நன்கு திறம்பட சமாளித்து விளையாடக்கூடிய வீரர்களே இதில் அதிகம் ரன்கள் குவிக்க முடியும்.
இந்திய அணியில் விராட் கோலி, ஜடேஜாவைத் தவிர மற்ற யாருக்கும் பெரிதாக இந்த மைதானத்தில் விளையாடிய அனுபவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரராக திகழும் டிராவிஸ் ஹெட் பெர்த் மைதானத்தின் சில பகுதிகள் கடுமையான சவாலை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும் என்று இந்திய அணியை எச்சரிக்கும் விதத்தில் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
மைதானம் கடும் சவால் அளிக்கக் கூடிய வகையில் இருக்கும் – டிராவிஸ் ஹெட்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் பெர்த் மைதானத்தில் பேட்டிங் செய்வதை ரசித்தேன் என்று எனக்கு நன்றாக தெரியும். எளிமையாக கூறினால் இந்த விக்கெட்டின் சில பகுதிகள் சவால் அடிக்கக்கூடிய வகையில் இருக்கும். தற்போது எல்லோரும் இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு மூன்றாவது நான்காவது மற்றும் ஐந்தாவது நாட்களில் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து சவால் அளிக்கும் வகையில் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:ஆஸி அணியில் இவருக்கு மட்டும் குறி வைங்க.. இந்தியாவுக்கு வெற்றி உறுதி.. ரகசியம் இதான் – வாசிம் ஜாஃபர் பேட்டி
ட்ராவிஸ் ஹெட் இந்த மைதானத்தில் பேட்டிங் சராசரி 40 வைத்திருக்கிறார் என்று குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்திய அணியில் திறமையான இளம் பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அவர்கள் எத்தகைய பந்துவீச்சையும் சமாளித்து விளையாடக்கூடிய வீரர்கள் அணியில் இருக்கிறார்கள் என்பதால் இந்த போட்டி இரண்டு அணிகளுக்கும் சவால் அளிக்கக் கூடிய வகையில் இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.