இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு குறிப்பிட்ட ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் குறிவைத்து விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்திருக்கிறார்.
மிகக்குறிப்பாக தற்பொழுது ஆஸ்திரேலியா அணியில் பந்துவீச்சாளருக்கான இடத்தில் விளையாடும் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் காயத்தால் இந்த தொடரில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டார். இதை வைத்து வாசிம் ஜாஃபர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா பவுலிங் யூனிட்
ஆஸ்திரேலியா அணி தங்களின் வழக்கமான மூன்று பேர் கொண்ட வேகப் பந்துவீச்சு பவுலிங் யூனிட்டை அமைக்கும். மேலும் ஒரே ஒரு சுழல் பந்துவீச்சாளராக நாதன் லயனை வழக்கம் போல் அணியில் வைத்துக் கொள்ளும். தற்போது அவர்களுக்கு கேமரூன் கிரீன் இல்லாததால் பந்துவீச்சில் ஐந்தாவது இடம் காலியாக இருக்கிறது.
இந்த இடத்திற்கு அவர்கள் மிட்சல் மார்சை முயற்சி செய்வார்கள். ஆனால் பந்துவீச்சில் இவர் கேமரூன் கிரீன் போல தாக்கத்தை உண்டாக்கக் கூடியவர் கிடையாது. மேலும் லபுசேன் தற்பொழுது மித வேகப்பந்துவீச்சை மேற்கொண்டு வருகிறார். இவராலும் பெரிய அளவில் பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை குறி வைத்து விளையாடுங்கள்
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் வாசிம் ஜாஃபர் கூறும் பொழுது “இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்து நிறைய பேசப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலியா பந்துவீச்சு தாக்குதலை ஒன்றாக வைத்திருக்கக்கூடிய பந்துவீச்சாளராக நான் நாதன் லயனை பார்க்கிறேன்.
“எனவே நாதன் லயனை குறிவைத்து தாக்கி விளையாட இந்திய பேட்ஸ்மேன்கள் முன்வர வேண்டும். தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு நான்காவது வேகப்பந்துவீச்சாளர் இடத்தில் கேமரூன் கிரீன் இல்லை. எனவே நாம் நாதன் லயனை குறி வைத்து விளையாடினால் அவர்களுக்கு ஒரு மோசமான தொடர் உருவாக வாய்ப்பு உண்டு”
இதையும் படிங்க : ஹர்திக் சர்துலை இதனால்தான் எடுக்கல.. நிதீஷ் குமார் அடுத்த கங்குலி மாதிரி – அகர்கர் விளக்கம்
“கில் இல்லாத நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாவது இடத்தில் படிக்கல் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் ஏற்கனவே அந்த இடத்தில் நிறைய விளையாடி அனுபவம் கொண்டிருக்கிறார். மேலும் இந்திய அணிக்காகவும் அவர் அறிமுகம் ஆகிவிட்டார். மேலும் அவர் ஒரு இடதுகை வீரராக இருப்பதால் மூன்றாவது இடத்தில் விளையாடுவது” முக்கியம் என்று கூறியிருக்கிறார்






