“ஆஸ்திரேலியா யாருனு காட்டிட்டாங்க.. எங்க மொத்த டீமும்..!” – ரவிச்சந்திரன் அஸ்வின் பேச்சு!

0
27471
Ashwin

ஐசிசி உலகக் கோப்பையில் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று இறுதி ஆட்டத்தில் ஆடுகளம் தோய்வாக இருந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

மேலும் ஆஸ்திரேலியாவில் நிறைய இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்ததால் அஸ்வின் அணியில் இருந்தால் அவர்களது விக்கெட்டை வீழ்த்துவார் என்று பல கிரிக்கெட் வல்லுனர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

ஏற்கனவே இந்தியா ஆஸ்திரேலியா மோதிய லீக் ஆட்டத்தில் அஸ்வின் இடம்பெற்று இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஆனால் இறுதிப் போட்டியில் பிளேயிங் லெவனை மாற்ற விரும்பாத ரோகித் சர்மா, அஸ்வினை பெஞ்சில் அமர்த்துவிட்டு சூரிய குமார்யாதவை பிளேயிங் லெவனில் சேர்த்தார்.

ஆனால் அது பலன் அளிக்கவில்லை. பலரும் சூரிய குமாரின் இன்னிங்ஸை விமர்சித்து கருத்து போட்டு வருகிறார்கள். எனினும் இந்த தொடரில் கடைசி கட்டத்தில் இந்திய அணியில் இடம் பெற்ற அஸ்வின் ஒரே ஒரு போட்டியில் தான் விளையாடினார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு அஸ்வின் தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நேற்று இரவு நிகழ்ந்த தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. மனது எல்லாம் சுக்குநூறாக உடைந்து விட்டது.

- Advertisement -

எங்களது அணியில் பலரும் இந்த உலகக் கோப்பை தொடருக்காக இருந்த நாட்களை மறக்கவே முடியாது. குறிப்பாக விராட் கோலி, சமி, ரோகித் சர்மா ஆகியோர் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினார்கள். அதேசமயம் என்னால் ஆஸ்திரேலியாவை பாராட்டாமல் இருக்கவே முடியாது.

நவீன கிரிக்கெட் உலகத்தில் அவர்கள் தான் பெரியவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள். நேற்று இரவு ஆடுகளத்தில் நான் பார்த்ததை என்னால் நம்பவே முடியவில்லை. ஆஸ்திரேலியா அணி ஆறாவது உலகக் கோப்பை வென்றதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

நேற்று மட்டும் இந்திய அணி உலக கோப்பையை வென்று இருந்தால் விராட் கோலியும் அஸ்வினும் ஒரு மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்திருப்பார்கள். ஆம் , இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இரண்டு முறை உலக கோப்பையை வென்ற வீரர்கள் என்ற பெருமை அவர்களுக்கு சேர்ந்திருக்கும்.

ஆனால் இந்திய அணி தோல்வியை தழுவியதால் அந்தப் பெயர் கிடைக்கவில்லை. மேலும் அஸ்வின் இந்தியா விளையாடிய 11 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே களமிறங்கியதும் தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. எனினும் அஸ்வினை ஏன் தேர்வு செய்யவில்லை என்பது குறித்து இந்திய அணி நிர்வாகம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.