AUSvsNZ.. விளையாட வராத கான்வோ.. கம்மின்ஸ் கலக்கல்.. நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

0
112
Australia

தற்பொழுது ஆஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

டி20 உலக கோப்பைக்கு சில முயற்சிகளை செய்து பார்ப்பதற்கு ஆஸ்திரேலியா இந்தத் தொடரை பயன்படுத்துகிறது. எனவே முதல் போட்டியில் துவக்க ஆட்டக்காரராக வந்த டேவிட் வார்னரை வெளியில் வைத்து, ஸ்மித்தை துவக்காட்டுக்காரராக அனுப்பினார்கள்.

ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர் டிராவீஸ் ஹெட் 45, கேப்டன் மிட்சல் மார்ஸ் 26, கடைசி கட்டத்தில் கம்மின்ஸ் 28 ரன்கள் எடுக்க, 19.5 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் எடுத்தது. லாக்கி பெர்குஷன் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு காயம் காரணமாக டெவோன் கான்வே விளையாட வரவில்லை. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு மிடில் வரிசையில் கிளன் பிலிப்ஸ் மட்டுமே தாக்குப்பிடித்து 46 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து அணிக்கு வேறு எந்த பேட்ஸ்மேன்களும் அடுத்து 16 ரன்கள் தாண்டி அடிக்கவில்லை. டிரண்ட் போல்ட் கடைசியில் 16 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி இறுதியாக 17 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆடம் ஜாம்பா நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

முடிவில் ஆஸ்திரேலியா அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்பொழுது தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி தற்போது டி20 கிரிக்கெட் வடிவத்திலும் மிகவும் வலிமையான அணியாக காணப்படுகிறது.