654 ரன்.. கவாஜா ரன் குவிப்பு.. மொத்தம் 3 சதங்கள்.. இலங்கை அணி பரிதாபம்.. ஆஸி ஆதிக்கம்.. முதல் டெஸ்ட்

0
473
Khawaja

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 654 ரன்கள் குவித்து டிக்ளர் செய்திருக்கிறது.

தற்போது இலங்கை வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. இதில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. நேற்று இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் ஆரம்பித்தது.

- Advertisement -

முதல் நாள் ஆதிக்கம்

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்த முறை துவக்க ஆட்டக்காரராக வந்த ஹெட் 40 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா மற்றும் கேப்டன் ஸ்மித் இருவரும் சதம் அடிக்க, முதல் நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் ஆஸ்திரேலியா அணி எடுத்தது.

இன்று இரண்டாவது நாளில் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் ஸ்மித் 251 பந்தில் 141 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய உஸ்மான் கவாஜா இரட்டை சதம் அடித்து அசத்தினார். உஸ்மான் கவாஜா மொத்தம் 352 பந்துகளை சந்தித்து 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 232 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

ஜோஸ் இங்லீஷ் அதிரடி

இதைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜோஸ் இங்லீஷ் சதம் அடித்து 94 பந்தில் 102 ரன்கள், அலெக்ஸ் கேரி 46* ரன்கள் எடுத்தார்கள். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 154 ஓவர்கள் விளையாடி ஆறு விக்கெட் இழப்புக்கு 654 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இலங்கை அணியின் தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் வான்டர்சே இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி.. ரசிகர்களுக்கு உறுதி அளித்த ஹர்திக் பாண்டியா.. இது எங்களின் பெருமை என ஷாகின் ஆப்ரிடி பேச்சு

இதைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி இன்று இரண்டாம் நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருக்கிறது. இன்னும் 600 ரன்களுக்கு மேல் பின்தங்கி இருக்கின்ற காரணத்தினால், இந்த போட்டியில் சொந்த மண்ணில் இலங்கை அணி பின்னணியில் இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்துகிறது!

- Advertisement -