சாம்பியன்ஸ் டிராபி.. ரசிகர்களுக்கு உறுதி அளித்த ஹர்திக் பாண்டியா.. இது எங்களின் பெருமை என ஷாகின் ஆப்ரிடி பேச்சு

0
189

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரும் 19ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ப்ரோமோ ஒன்றை டிஸ்னி ஹாட் ஸ்டார் வெளியிட்டு இருக்கிறது. இதில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவும், பாகிஸ்தான் வீரர் ஷாகின் ஆப்ரிடியும் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபியும் கலந்து கொண்டனர்.

2017 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தத் தொடர் மீண்டும் நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த வீடியோவில் இடம் பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா இந்திய அணி தனித்துவமான கிரிக்கெட்டை விளையாடும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

மீண்டும் கோப்பையை கொண்டு வருவோம்:

இது குறித்து பேசிய அவர், “சாம்பியன்ஸ் கோப்பை மீண்டும் நடைபெறுவது ஒருநாள் கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமான விஷயமாக நான் கருதுகிறேன். இது ஒரு நாள் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கும். இது ரசிகர்கள் மற்றும் வீரர்கள் ஆகிய எங்களுக்கும் எதிர்பார்ப்பை தூண்டி விட்டிருக்கிறது”.

“நாங்கள் இந்த தொடரில் தனித்துவமான கிரிக்கெட்டை விளையாடி கோப்பையை மீண்டும் தாய் நாட்டுக்கு கொண்டு வர முயற்சி செய்வோம் என்று ஹர்திக் பாண்டியா கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து பேசிய ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, முதல்முறையாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நாங்கள் விளையாடுகிறோம்”.

- Advertisement -

முகமது நபி, ஷாகின் ஆப்ரிடி நெகிழ்ச்சி:

“சிறந்த அணிகளுக்கு மத்தியில் நாங்கள் விளையாடுகிறோம். அவர்களுக்கு எதிராக நாங்கள் விளையாடுவதை நினைத்து பெருமை கொள்கிறோம். ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது” என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் வீரர் ஷாகின் ஆப்ரிடி, “பாகிஸ்தானை பொறுத்தவரை கிரிக்கெட் என்பது விளையாட்டுக்கும் மேல். இது எங்களுடைய அடையாளம். எங்களுடைய பெருமை. எங்களுடைய வெறி என்று கூட சொல்லலாம்”.

“இதனால் நாங்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வெற்றிகரமாக தக்க வைத்துக் கொள்வோம். பிப்ரவரி 19ஆம் தேதியை ஒட்டுமொத்த பாகிஸ்தான் எதிர்கொண்டு காத்திருக்கிறது. மற்றொரு விட இது மிகவும் சிறப்பாக இருக்கும்” என்று ஷாகின் அப்படி கூறியுள்ளார்.

- Advertisement -