ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை? ஸ்மித் கணிப்பு

0
1206

ஐபிஎல் 16வது சீசன் நாளை முதல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியிலே ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணி நான்கு முறை சாம்பியன் ஆன சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. கடந்த முறை சிஎஸ்கே அணிக்கு மிகவும் ஏமாற்றமான தொடராக அமைந்தது.

- Advertisement -

கேப்டன்ஷிப் மாற்றம்,முக்கிய வீரர்கள் காயம், அணியில் சலசலப்பு என பல்வேறு பிரச்சனைகள் இருந்தது. ஆனால் இம்முறை சிஎஸ்கே அணி எந்த சிக்கலும் இன்றி பங்கேற்கிறது. இந்த நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், லக்னோ, ஆர் சி பி மற்றும் ராஜஸ்தான் அணிகள் தகுதி பெற்றன. எனவே இந்த ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் அணிகள் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்மித் கணித்துள்ளார்.

கடந்த மெகா ஏலத்தில் ஸ்மித் கலந்து கொண்ட போதிலும் அவரை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. இதனால் இம்முறை ஐபிஎல் ஏலத்தில் ஸ்மித் கலந்து கொள்ளவில்லை. எனினும் ஐபிஎல் தொடரில் அவர் வர்ணனையாளராக பணியாற்ற உள்ளார். இது குறித்து பேசிய அவர் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக பங்கு பெறுவது மிகவும் எதிர்பார்ப்பை தமக்கு ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தகுதி பெறும் என கணித்துள்ளார். சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகள் நடைபெறுவதால் சிஎஸ்கே அதில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

- Advertisement -

குஜராத் மற்றும் லக்னோ அணிகள் கடந்த முறை சிறப்பாக விளையாடிய உத்வேகத்துடன் இருப்பார்கள் என்பதால் அந்த அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. எனினும் ஸ்மித் சொன்ன சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரசிகர்கள் அவ்வளவு ஆக ஆதரவு கொடுக்கவில்லை. இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள ரசிகர்கள் ஸ்மித் சொன்ன மூன்று அணிகளை தாங்கள் ஏற்பதாகவும் ஆனால் ஹைதராபாத்திற்கு பதில் பெங்களூர் அணி தான் பிளே ஆப் செல்லும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பும்ராவின் காயத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி மீது பலருக்கும் எதிர்பார்ப்பு இல்லாமல் உள்ளது. ஆனால்  அந்த அணி எப்போது வேண்டுமானாலும் தொடர் வெற்றிகளை பெரும் அளவுக்கு கணிக்க முடியாத அணி என்பது குறிப்பிடத் தக்கது.