உலக கிரிக்கெட்

இவரு வேற மாதிரி கிரிக்கெட்டர்.. 2027 உலக கோப்பைக்கு பலே ஸ்கெட்ச்.. முக்கிய முடிவை வெளியிட்ட ஆஸி மிச்சல் ஸ்டார்க்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் ஆஸ்திரேலியா அணிக்கு பிரதான பந்துவீச்சாளராக இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஸ்டார்க், ஒரு நாள் உலகை கோப்பைக்கு தயாராகும் வகையிலும், ஆஸ்திரேலியா அணியுடனான கிரிக்கெட் அட்டவணைக்கு ஏற்ப வகையில் முக்கிய முடிவு ஒன்றை அறிவித்திருக்கிறார்.

உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிச்சல் ஸ்டார்க் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் சிறந்த வீரராக இருந்து வருகிறார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணி உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் ஸ்டார்க், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 2026 ஆம் ஆண்டிற்கு ஏற்ப ஆஸ்திரேலியா கிரிக்கெட் அட்டவணைக்கு தகுந்தபடியும், 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பைக்கு தன்னை புத்துணர்ச்சியோடு வைத்திருக்க விரும்புவதாகவும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கான காரணத்தை அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ஸ்டார்க் கூறும்போது “டெஸ்ட் கிரிக்கெட் எப்போதுமே எனது மிக உயர்ந்த முன்னுரிமையாக இருந்து வருகிறது. நான் ஆஸ்திரேலியா அணிக்கு விளையாடிய ஒவ்வொரு டி20 ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும், 2021 ஆம் ஆண்டு உலக கோப்பையையும் நான் மிகவும் ரசித்தேன். நாங்கள் ஜெயித்ததால் இதனை சொல்லவில்லை. எங்கள் அணி அப்போது நம்ப முடியாத வகையில் சிறப்பானதாக இருந்தது.

இதையும் படிங்க:நான் செய்த தவறால்.. விராட் கோலி உடனான நட்பு ரொம்ப பாதிக்கப்பட்டது.. மனம் திறந்து பேசிய முன்னாள் கிரிக்கெட்டர் உத்தப்பா

2027 ஆம் ஆண்டு இந்திய வெளிநாட்டு டெஸ்ட் சுற்றுப்பயணம், ஆஷஸ் மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பையை எதிர்நோக்கும் வகையில் அந்தத் தொடர்களுக்கு புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் சிறந்த நிலையிலும் இருக்க இதுவே எனது சிறந்த முடிவாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் என்று ஸ்டார்க் பேசியிருக்கிறார். மொத்தமாக 65 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டார்க் 79 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குறிப்பிடத்தக்க விதமாக தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு கவனம் செலுத்தும் வகையில் டெஸ்ட், ஒரு நாள் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்று வரும் நிலையில் ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்திருப்பது ரசிகர்களிடையே அதிக பாராட்டை பெற்று வருகிறது.

- Advertisement -
Published by

Recent Posts