ஆஸ்திரேலியா சூழல் ஒத்துழைக்காவிட்டாலும் இந்திய அணி இப்படித்தான் அங்கு வரும்- ரிக்கி பாண்டிங் கணிப்பு!

0
265
Ricky ponting

இந்திய கிரிக்கெட்டில் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு தற்போது வேகப்பந்து வீச்சு மிக சிறப்பாக இருக்கிறது. அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் இல்லாவிட்டாலும், அவருக்குப் பதிலாக அவருக்கு இணையான இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் அணியில் இருக்கும் அளவிற்கு, இந்திய அணியில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

இந்தவகையில் முப்பத்தி ஒரு வயதான முகமது ஷமி ஒரு உலகத் தரமான வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இவரது பந்துவீச்சு ஒரு கண்காட்சி போல் இருக்கிறது. இவரது அப்ரைட் சீம் வேகப்பந்து வீச்சு பேட்ஸ்மேன்களை கிரீஸில் நடனமாட வைக்கிறது. தற்போது இவர் பவுலின் பார்மில் உச்சத்தில் இருக்கிறார் என்றே கூறலாம்.

- Advertisement -

சிறந்த செயல் நிலையில் இருக்கும் இவரை ஆசிய கோப்பை அணியில் பும்ரா இல்லாதபோதும் இந்திய தேர்வாளர்கள் தேர்வு செய்யவில்லை. இது சமீபத்தில் புதிய விமர்சனத்திற்கு உள்ளானது. பல முன்னாள் வீரர்கள் அணியைத் திருத்தி முகமது சமியை அணியில் சேர்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். தற்போதைய ஆசியக் கோப்பை இந்திய அணியில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் குறைவாகத்தான் இருக்கிறார்.

முகமது சமி டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் டி20 போட்டிகளில் ரன்களை கசிய விட்டுத்தான் இருந்தார். தற்போது இவரை இந்திய அணி நிர்வாகம் ஒருநாள் போட்டிகளுக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கும் பயன்படுத்தி வருகிறது. இவர் கடைசியாக நமிபியா அணிக்கு எதிராக கடந்த உலக கோப்பை டி20 போட்டியில் விளையாடி இருந்தார். அதற்குப் பிறகு இவருக்கு இந்தியா டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தற்போது இந்திய தேர்வாளர்களின் இந்த தேர்வு பற்றி ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் ” முகமது சமி நீண்ட காலமாக இந்திய அணிக்கு மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்துவருகிறார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்த கூடியவராக இருக்கிறார். இந்திய t20 கிரிக்கெட் இருக்கு முகமது சமியை விட சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். தற்போது இதிலிருந்து 3 வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்திருக்கிறார்கள். நான்காவதாக ஒரு வேகப்பந்துவீச்சாளர் எடுப்பதாக இருந்தால் முகமது சமியை எடுத்து இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய ரிக்கி பாண்டிங் ” தற்போது காயம் அடைந்துள்ள பும்ராவைத்தான் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக சேர்த்தி ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு கொண்டுவர விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன். அதேசமயத்தில் ஆஸ்திரேலிய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு பெரியதாய் ஒத்துழைக்காவிட்டாலும், அதிக சுழற்பந்துவீச்சாளர்களோடு வருவார்கள் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்!