தற்போது இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-2 என தோல்வியடைந்து இருந்தாலும் ஆஸ்திரேலியா அணி முழுமையாக வரும் பொழுது சிறப்பாக இருக்கும் என கேப்டன் மிட்சல் மார்ஸ் கூறியிருக்கிறார்.
இன்று ஹோபர்ட் மைதானத்தில் தொடங்கிய தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்திய அணி விக்கெட் இழப்பில்லாமல் 4.5 ஓவரில் 52 ரன் எடுத்திருந்தபோது வந்த மழை நிற்காத காரணத்தினால் போட்டி முடிவில்லாமல் அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி ஏற்கனவே நான்கு போட்டிகளில் மழையால் ஒரு போட்டி ரத்தாகி இருக்க மீதி இரண்டு போட்டிகளை வென்று இருந்த காரணத்தினால், இந்த போட்டியும் மழையால் ரத்து ஆன காரணத்தினால், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
இந்தத் தொடர் தோல்வி குறித்து மிட்சல் மார்ஸ் பேசும்பொழுது “இப்படி மழைக்கு நடுவே நாங்கள் கடைசியாக எந்த தொடரை விளையாடினோம் என்று நினைவில் இல்லை. மொத்தத்தில் இது அருமையாக இருந்தது. இந்தியா முக்கியமான போட்டிகளில் வெற்றி பெற்றது. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். பல நல்ல அனுபவங்களையும் நினைவுகளையும் இந்த தொடரில் இருந்து எடுத்துச் செல்லலாம்”
“இந்தத் தொடர் எங்களுடைய இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருந்தது. அதை அவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஒட்டுமொத்தமாக எங்களுடைய அணியின் மனநிலை மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது. அடுத்து ஆசஸ் தொடர் வருகின்ற காரணத்தினால், எங்களால் எல்லா வீரர்களும் சேர்ந்து விளையாட முடியவில்லை. நாங்கள் முழு அணியாக இருக்கும் பொழுது நிலையான அணியாக இருப்போம்”
இதையும் படிங்க: 417 ரன்.. மீண்டும் ஜூரல் அசத்தல் சதம்.. பண்ட் கம்பேக் அதிரடி.. அடுத்த ஜடேஜா இளம் வீரர் மாஸ் பேட்டிங்
“டி20 உலகக் கோப்பைக்கு நான் கேப்டனா வருவேனா அல்லது ஒரு பேட்ஸ்மேனாக வருவேனா என்று கேட்கிறீர்கள், நான் இப்போது போலவே அந்த தொடரிலும் இருப்பேன் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.