417 ரன்.. மீண்டும் ஜூரல் அசத்தல் சதம்.. பண்ட் கம்பேக் அதிரடி.. அடுத்த ஜடேஜா இளம் வீரர் மாஸ் பேட்டிங்

0
617
Jurel

தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி 417 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

இந்த போட்டியில் இரண்டு எண்ணிக்கையிலும் துருவ் ஜுரல் சதம் அடித்து அசத்தியிருக்கிறார். மேலும் இரண்டாவது இன்னிங்சில் காயம் அடைந்து வெளியேறிய ரிஷப் பண்ட் மீண்டும் திரும்பி வந்து அதிரடி அரைசதம் அடித்திருக்கிறார்.

- Advertisement -

துருவ் ஜுரல் முதல் சதம்

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு நட்சத்திர வீரர்கள் அபிமன்யு ஈஸ்வரன் கே எல் ராகுல் சாய் சுதர்சன் படிக்கல் மற்றும் ரிஷப் பண்ட் எல்லோரும் ஏமாற்றினார்கள். இந்த நிலையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று 134 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 255 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதற்கு அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 221 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு கேப்டன் ஆக்கர்மேன் தனி ஒரு ஆளாக நின்று அதிரடியாக 134 ரன்கள் குவித்தார். இந்திய அணியின் தரப்பில் பிரசித் கிருஷ்ணா 3, சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

மீண்டும் துருவ் ஜுரல் அட்டகாசம்

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் டாப் ஆர்டர்கள் ஏமாற்றினார்கள். இந்த போட்டியில் காயம் அடைந்து வெளியேறி இருந்த ரிஷப் பண்ட் மீண்டும் திரும்பி வந்து அதிரடியாக விளையாடி 54 பந்தில் 65 ரன்கள் எடுத்தார். இந்திய கிரிக்கெட்டில் அடுத்த ரவீந்திர ஜடேஜா என்று பார்க்கப்படும் ஹர்ஸ் துபே 116 பந்தில் 84 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : ஆஸி கூட அதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. பயிற்சியே இதுக்காகத்தான் – அபிஷேக் ஷர்மா பேட்டி

இன்னொரு முனையில் மிகச்சிறப்பாக விளையாடிய துருவ் ஜுரல் இந்த இன்னிங்ஸிலும் ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று 170 பந்துகளில் 127 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. 417 ரன் இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி மூன்றாவது நாள் முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் 25 ரன் எடுத்திருக்கிறது.

- Advertisement -