“சமி! சிராஜ்! ஜடேஜா! அபார பந்துவீச்சு”….188 ரண்களுக்கு பொட்டலமான ஆஸ்திரேலியா!

0
141

டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் தாசியில் வெற்றி பெற்ற இந்தியா ஆஸ்திரேலியா அணியை பேட்டிங் செய்ய பணிந்தது.

ஆஸ்திரேலியா அணி முதல் விக்கெட்டை இரண்டாவது ஓவரிலேயே இழந்தது. அந்த அணியின் டிராவஸ் ஹெட் ஐந்து ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது சிராஜ் பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ஸ்டீவன் ஸ்மித் மிச்சல் மார்ஸ் ஆகியோர் சிறப்பாக ஆடி இரண்டாவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆஸ்திரேலியா அணி 77 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டீவன் ஸ்மித் 22 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அதிரடியாக ஆடிய மிச்சல் மார்ஸ் தனது அரை சதத்தை நிறைவு செய்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் 81 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதில் ஐந்து சிக்ஸர்களும் 10 பவுண்டரிகளும் அடங்கும்.

இவருக்குப் பின் ஆட வந்த எந்த ஒரு வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் ஆஸ்திரேலியா அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தனர். இங்கில்ஷ் மற்றும் லபுசேன் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர்.

நீண்ட ஓய்விற்குப் பிறகு ஆட வந்த மேக்ஸ்வெல் எட்டு ரண்களிலும் ஸ்டாய்நிஸ் ஐந்து ரங்களிலும் ஆட்டம் இழந்தனர். 133 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலியா அணி அடுத்த 55 ரண்களுக்கு மீதம் இருந்த எட்டு விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்களுக்கு 35.4 ஓவர்களில் ஆட்டம் இழந்தது.

- Advertisement -

இந்திய அணியின் பந்துவீச்சில் முகமது சமி மூன்று விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.