AUSvsWI ODI.. 37 ஓவரில் முடிவு.. வெஸ்ட் இண்டீஸ் புதிய தொடக்கம்.. வார்னர் இடத்துக்கு பரிசோதனை

0
279
Australia

தற்போது வெஸ்ட் இண்டிஸ் அணி ஆஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது.

இதில் முதலில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று என அபாரமான முறையில் விளையாடி வெஸ்ட் இண்டிஸ் ஆஸ்திரேலியா மண்ணில் டிரா செய்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இன்று மெல்போன் மைதானத்தில் இந்தத் தொடரின் முதல் போட்டி நடைபெற்று முடிந்து இருக்கிறது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

வெஸ்ட் இண்டிஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அலிக் ஆதனஸ் 5, ஜஸ்டின் கிரீவ்ஸ் 1 என சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து கேப்டன் ஷாய் ஹோப் 12, கெவிம் ஹாட்ஜ் 11 என அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த கேசி கார்தி 88, ரோஸ்டன் சேஸ் 59 என மொத்தம் 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒரு கௌரவமான ஸ்கோர் கிடைக்க உதவினார்கள்.

இறுதியாக வெஸ்ட் இந்திய அணி 48.4 ஓவரில் 10 விக்கட்டுகளையும் இழந்து 231 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா அணித்தரப்பில் சேவியர் பார்ட்லெட் ஒன்பது ஓவர்களுக்கு 17 ரன்கள் மட்டும் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு வார்னர் இடத்தில் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலீஷ் களமிறங்கி அபாரமாக 65 ரன்கள் எடுத்தார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 1 ரன்னில் வெளியேறினார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேமரூன் கிரீன் மற்றும் கேப்டன் ஸ்மித் இருவரும் சேர்ந்து கடைசி வரை விக்கெட் தராமல் 37 ஓவரில் ஆஸ்திரேலியா அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்கள்.

இதையும் படிங்க : சேவாக் ஸ்டைலில் ஜெய்ஸ்வால் சதம்.. இந்திய மண்ணில் முதல் முறை.. தனி வீரராக அபாரமான பேட்டிங்

கேமரூன் 100 பந்தில் 75 ரன்கள், கேப்டன் ஸ்மித் 74 பந்தில் 74 ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டிஸ் தரப்பில் மேத்திவ் போர்டு மற்றும் குடகேஷ் மோட்டி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியை வென்று ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.