180 ரன்.. இங்கிலாந்தை காப்பாற்றிய ஹெட் ஸ்டோய்னிஸ் ஜோடி.. ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து அணியை வென்றது

0
164
Australia

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் மிகவும் முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் மட்டுமே இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்கின்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது. மிகவும் உச்சகட்ட பரபரப்பில் இந்த போட்டி நடந்தும் முடிந்திருக்கிறது.

இதற்கு முன்பாக நேற்று இரவு இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற, மழையால் பாதிக்கப்பட்ட 10 ஓவர் போட்டியில், இங்கிலாந்து முதலில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய நமீபியா அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா ஸ்காட்லாந்து போட்டியின் முடிவுக்காக காத்திருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் முன்சே 23 பந்தில் 35 ரன்கள், மெக்முலன் 34 பந்தில் 60 ரன்கள், பெர்ரிங்டன் 31 பந்தில் 42 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு வார்னர், மார்ஸ், மேக்ஸ்வெல் மூன்று பேரும் உடனுக்குடன் ஆட்டம் இழக்க ஸ்காட்லாந்து பக்கம் ஆட்டம் திரும்பியது. இதன் காரணமாக நேற்றைய போட்டியைப் பார்த்த இங்கிலாந்து ரசிகர்கள் உச்சகட்ட டென்ஷனுக்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில் துவக்க ஆட்டக்காரர் ஹெட் மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் அதிரடியாக 44 பந்தில் 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தை ஆஸ்திரேலியா பக்கம் திருப்பினார்கள். ஹெட் 49 பந்தில் 68 ரன்கள், ஸ்டோய்னிஸ் 29 பந்தில் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.கடைசியில் டிம் டேவிட் 14 பந்தில் 24 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா அணி 19.4 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இதையும் படிங்க : சூப்பர் 8 சுற்றில் இந்த இரண்டு அணிகளும் இந்தியாவுக்கு கடும் சவாலாக இருக்கும்.. கூறுகிறார் பியூஸ் சாவ்லா

ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்று இருந்த நிலையில், அந்த அணியின் இந்த வெற்றியின் மூலமாக இங்கிலாந்து அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியின் 30 ஓவர் வரையில் இங்கிலாந்தின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகவே இருந்தது. ஒரு வழியாக ஆஸ்திரேலியா நேர்மையான கிரிக்கெட் விளையாடி இங்கிலாந்தையும் அடுத்த சுற்றுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.