80-5.. சாம்பியன் என நிரூபித்த ஆஸி.. நியூசி செய்த தவறு.. பாயிண்ட்ஸ் டேபிள் பரிதாபம்

0
857
Australia

ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு நியூசிலாந்து சென்று இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா அணி, இன்று இரண்டாவது போட்டியையும் வென்று இரண்டுக்கு பூஜ்ஜியம் என நியூசிலாந்து மண்ணில் நியூசிலாந்தை தோற்கடித்திருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பந்து வீசிய ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியை 162 ரன்களில் சுருட்டியது. ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஸ் ஹேசில்வுட் 5 விக்கெட் கைப்பற்றினார். நியூசிலாந்து தரப்பில் டாம் லாதம் 38 ரன் எடுத்திருந்தார். மற்ற யாரும் பேட்டிங்கில் பங்களிப்பு செய்யவில்லை.

- Advertisement -

இதையடுத்து தனது முதல் இன்னிசை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 256 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணிக்கு மூன்றாவது வீரராக வந்த லபுசேன் 90 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியின் வலது கை வேகம் பந்துவீச்சாளர் மேட் ஹென்றி ஏழு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கடுத்து நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் எழுந்து வந்து சிறப்பாக விளையாடியது. அந்த அணிக்கு டாம் லாதம் 73, கேன் வில்லியம்சன் 51, சச்சின் ரவீந்தரா 82, நேரில் மிட்சல் 58 ரன்கள் என எடுக்க, நியூசிலாந்து மொத்தமாக 372 ரன்கள் குறித்தது. ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு இலக்காக 279 ரன்கள் வைக்கப்பட்டது. இதை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு ஸ்மித் 9, உஸ்மான் கவஜா 11, லபுசேன் 6, கேமரூன் கிரீன் 5, டிராவிஸ் ஹெட் 18 ரன்கள் எடுக்க, 80 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் இழந்தது.

- Advertisement -

பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் நியூசிலாந்து அணிக்கான வெற்றி உறுதியென எல்லோரும் நினைத்தார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த மிட்சல் மார்ஸ் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் சேர்ந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள். இந்த ஜோடி ஆஸ்திரேலியா அணியை கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது.

சிறப்பாக விளையாடிய மார்ஸ் 102 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 82 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஸ்டார்க் ரன் ஏதும் இல்லாமல் வெளியேறினார். ஆனால் மேற்கொண்டு விக்கெட் விடாமல் அலெக்ஸ் கேரி 123 பந்தில் 15 பவுண்டரிகள் உடன் 93 ரன்களும், கேப்டன் கம்மின்ஸ் 44 பந்தில் 32 ரண்களும் எடுக்க, ஆஸ்திரேலியா ஏழு விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரையும் இரண்டுக்கு பூஜ்ஜியம் என கைப்பற்றியது.

இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் நீல் வாக்னர் அணியில் இருந்தாலும் அவர் விளையாட மாட்டார் என்று கூறியது. இதனால் அவர் உடனே ஓய்வை அறிவித்தார். வெற்றி கையில் இருந்த போட்டியில் அவர் இருந்திருந்தால் இவ்வளவு எளிதில் விட்டு இருக்க மாட்டார். நியூசிலாந்து பெரிய தவறு செய்து மாட்டிக் கொண்டது.

இதையும் படிங்க : வெறும் 1 போட்டி.. ஆர்சிபி பிளே ஆஃப் போக என்ன செய்ய வேண்டும்.. WPL 2024 புள்ளி பட்டியல்

மேலும் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தில் இருக்க, நியூசிலாந்து அணி தற்பொழுது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. நியூசிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடரை இழந்ததோடு புள்ளி பட்டியலில் முதல் இடத்தையும் இழந்திருக்கிறது.