10 ஓவர்.. பாஸ்பாலை வச்சு செய்த ஆஸி.. தவறை திருத்தாத இங்கிலாந்து படுதோல்வி.. 2வது டெஸ்ட் முடிவுகள்

0
132
Australia

தற்போது நடைபெற்று வரும் ஆசஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

முதல் போட்டியில் தோல்வி அடைந்திருந்த இங்கிலாந்து இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிரௌலி 76 ரன், ஜோ ரூட் 138 ரன் எடுக்க, அந்த அணி 334 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மிச்சல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

அசத்திய ஆஸ்திரேலியா

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு ஜாக் வெதரால்டு 72, மார்னஸ் லபுசேன் 65, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 61, கேமரூன் கிரீன் 45, அலெக்ஸ் கேரி 63, மிட்சல் ஸ்டார்க் 77 ரன்கள் சேர்த்தார்கள். சிறப்பாக முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 511 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 241 ரன்கள் எடுத்து சுருண்டது. அந்த அணிக்கு ஜாக் கிரவுலி 41, வில் ஜேக்ஸ் 44, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 50 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியா பந்துவீச்சில் நெசர் 5 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா 65 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

பத்து ஓவர்களில் முடிந்தது

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு ஹெட் 22, மார்னஸ் லபுசேன் 3 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஜாக் வெதரால்டு 17, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 23 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 10 ஓவர்களில் இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் வென்று முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிங்க : விராட் ரோகித் உலக கோப்பை வாய்ப்பை மீண்டும் உறுதி செய்யாத கம்பீர்.. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேச்சு

இங்கிலாந்து சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை கொண்டிருக்கிறது. ஆனால் இந்த அணுகுமுறையால் இங்கிலாந்து அணி பெற்ற வெற்றிகளை விட அதிக தோல்விகளையே அடைந்திருக்கிறது. ஆனாலும் தன் தவறுகளை திருத்திக் கொண்டு மரபு ரீதியாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இங்கிலாந்து முன்வரவில்லை. இதன் காரணமாக இந்த போட்டியிலும் தோல்வி அடைந்திருக்கிறது.

- Advertisement -