தென் ஆப்பிரிக்கனுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடியிருந்த போதிலும், தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் அவர்களது உலகக்கோப்பை வாய்ப்பை உறுதிப்படுத்தவில்லை.
இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம், ரோகித் சர்மா இரண்டு அரைசதங்கள் அடித்து இருக்கிறார்கள். மேலும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரிலும் சிறப்பாகவே இருந்தார்கள். இருந்தும் கூட கம்பீர் இவர்களது உலகக்கோப்பை வாய்ப்பை உறுதிப்படுத்தி பேச மறுத்து விட்டார்.
இரண்டு ஆண்டுகள் இருக்கிறது
நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கம்பீர் இது குறித்து பேசும் பொழுது “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள். அவர்களுடைய அனுபவம் டிரெஸ்ஸிங் ரூமுக்கு மிகவும் தேவையாக இருக்கிறது. அவர்கள் நீண்ட காலமாக இதை செய்து வருகிறார்கள். 50 ஓவர் கிரிக்கெட்டுக்கு இது தேவையாக இருக்கும்”
“முதலில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. இதை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். மேலும் இளம் வீரர்களும் தங்களது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள்”
ருதுராஜ் ஜெய்ஸ்வால் சிறப்பாக இருந்தார்கள்
“ருதுராஜ் போன்ற ஒரு வீரர் தன்னுடைய பேட்டிங் பொசிஷன் இல் இருந்து வெளியே வந்து விளையாடி இருக்கிறார். அவர் மிகவும் தரமான வீரர். இந்திய ஏ அணியில் அவர் சிறந்த பார்மில் இருந்த காரணத்தினால், இந்த தொடரில் அவருக்கு நாங்கள் ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்பினோம். நாங்கள் அழுத்தத்தில் இருந்த பொழுது, அவர் இந்த வாய்ப்பை மிகவும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்”
இதையும் படிங்க : நான் இந்திய அணியை அப்படி சொல்லி இருக்கக் கூடாது.. விராட் ரோஹித் விலை கொடுக்க வச்சிட்டாங்க – கான்ராட் பேச்சு
“ருதுராஜ் அடித்த சதம் மிகவும் தரமானது. ஜெய்ஸ்வால் சதமும் அப்படியானது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி ஆன தரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று நாம் எல்லோரும் பார்த்து இருக்கிறோம். குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இது அவர்களுடைய ஆரம்பம். இவர்கள் இருவருக்கும் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.






