பும்ராவை சமாளிக்க இதுதான் சிறந்த மந்திரம்.. அவர்கிட்ட இது மட்டும் செய்யக்கூடாது – மிட்சல் மார்ஸ் பேட்டி

0
203

இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பந்துவீச்சை சமாளிக்க சிறந்த வழி எதுவென்பது குறித்து ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் மிட்சல் மார்ஸ் பேசியிருக்கிறார்.

நாளை மறுநாள் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் துவங்க இருப்பதால், மீண்டும் பும்ரா பந்துவீச்சு குறித்தான பேச்சுகள் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் அவரை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என மிட்சல் மார்ஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

அச்சுறுத்தல் தரும் பும்ரா

பும்ரா காயத்திலிருந்து திரும்பி வந்த பிறகு பந்தை உள்நோக்கி வீசி அதை வெளியே எடுக்கும் முறையில் சிறப்பானவராக மாறினார். இதன் காரணமாக ஏற்கனவே அபாயகரமான பந்துவீச்சாளராக இருந்த அவர் இன்னும் அபாயகரமான பந்துவீச்சாளராக உருவெடுத்திருக்கிறார்.

மிகக்குறிப்பாக வலது கை பேட்ஸ்மேன்கள் அவருக்கு எதிராக இப்படியான பந்துகளை விளையாட முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் அவருடைய ரிலீஸ் பாயிண்ட் பேட்ஸ்மேன்களை நோக்கி முன்னே இருக்கின்ற காரணத்தினால், பந்து எதிர்பார்ப்பதை விட கொஞ்சம் கூடுதல் நேரத்தில் வந்துவிடுகிறது. இதன் காரணமாகவும் பேட்ஸ்மேன்கள் அவரை விளையாட மிகவும் சிரமப்படுகிறார்கள். நடப்பு தொடரில் அவரே அதிக விக்கெட் கைப்பற்றியவராக இருக்கிறார்.

- Advertisement -

பும்ராவிடம் இப்படித்தான் செல்ல வேண்டும்

உம்ரா பந்துவீச்சை விளையாடுவது குறித்து மிட்சல் மார்ஸ் பேசும்பொழுது “உலகின் சிறந்த பவுலரை நீங்கள் எதிர்கொள்ளும் பொழுது அவருக்கு எதிராக சென்றால் நீங்கள் ஆட்டம் இழந்து விடுவீர்கள். அவர் உங்கள் விக்கெட்டை வீழ்த்தி விடுவார். அவரை சிறந்த முறையில் விளையாட வேண்டும் என்றால் உங்களுக்கு நீங்களே அழுத்தம் கொடுத்துக் கொண்டு, அந்த சவாலை எடுத்துக் கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க :ஸ்டார்க் சிரிக்கல அது நெருப்பு.. ஜெய்ஸ்வால் தப்பான ஆளு கிட்ட மோதிட்டார்.. நடந்தது இதுதான் – ரிக்கி பாண்டிங் கருத்து

“அவர் தற்போது உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என்று எங்களுக்கு எல்லோருக்கும் தெரியும். இது அவர் கொடுக்கும் சவாலை எதிர்கொள்வது பற்றியானது. இது மிக நீண்ட தொடராகவும் இருக்கிறது. எங்கள் அணியில் வித்தியாசமான முறையில் தாக்குதல் செய்து விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். நாங்கள் ஒவ்வொருவரும் எங்களுடைய சொந்த வழியில் சென்று தாக்கி விளையாட வேண்டிய நேரத்தில் அதை செய்வோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -