ஜெய்ஸ்வால் மிட்சல் ஸ்டார்க் இடம் பந்து மெதுவாக வருகிறது என்று கூறி அவரை தூண்டி விட்டு விட்டதாக தான் நினைப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி என்பது இந்திய வீரர் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியா வேகப் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் இடம் பந்து மெதுவாக வருகிறது என்று கூறி வம்பு இழுத்தார். இதற்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே அவரை வெளியேற்றி ஸ்டார்க் பதிலடி கொடுத்தார்.
அது எரியும் நெருப்பு
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “ஸ்டார்க் உண்மையில் அழகான நிலைத்தன்மை கொண்ட ஒரு வீரர். அவர் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் கலக்கம் அடைய மாட்டார். அவர் இப்போது பந்து வீசும் போது கூட இப்படியான அவரது குணத்தை நீங்கள் அவரிடம் பார்க்க முடியும்”
“மேலும் ஜெய்ஸ்வால் போல யாராவது அவரிடம் ஏதாவது சொன்னால் அவர் ஒரு சிறிய புன்னகையுடன் பதில் அளிப்பார். ஆனால் அப்படியான அவரது சிரிப்பு உள்ளே எரியும் நெருப்பை மறைப்பதற்காக இருக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்களே பாருங்கள் இரண்டாவது டெஸ்டில் அவர் சிறப்பாக பந்து வீசினார்தானே!”
பிங்க் பந்து அவருக்கு இப்படித்தான்
இதுகுறித்து மேலும் பேசிய ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது ” ஸ்டார்க் நல்ல நிலைத்தன்மை கொண்ட பந்துவீச்சாளர் மேலும் அவரிடம் நல்ல வேகம் இருக்கிறது. அவரால் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீச முடியும். தற்போது 140 மற்றும் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மத்தியில் வீ சிக் கொண்டிருக்கிறார். அவரது இந்த நிலைத்தன்மை மற்றவர்களுக்கும் ஒரு பதிலாக இருக்கிறது”
இதையும் படிங்க :ரோகித் கோலியை வீரர்களை நீக்க.. பிசிசிஐ இந்த மாதிரி ஒரு வேலையை செய்யணும் – கிரேக் சேப்பல் பேட்டி
“மேலும் அவர் பிங்க் பந்தில் நல்ல சாதனைகளை வைத்திருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம் இந்த நிறப் பந்து அவருக்கு வெள்ளைப் பந்து போலவே இருப்பதாக நினைக்கிறேன். அவர் வெள்ளை பந்தில் நல்ல சாதனைகளை வைத்திருப்பதால் அவருக்கு பிங்க் வந்து அதுபோலவே இருப்பதால் சிறப்பாக அமைகிறது” என்று கூறியிருக்கிறார்.






