“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான லெவனை அறிவித்தது ஆஸ்திரேலியா” – மூன்று இந்தியர்களுக்கு இடம்!

0
643

2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம்  ஆண்டு வரைக்கும் ஆன  வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஷிப்  கிரிக்கெட் தொடரின்  சுற்று முடிவடைந்து இருக்கிறது . இந்த  சுற்றின்  இறுதியில்  அதிக வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள்  ஜூன் மாதம் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளன .

இந்த தொடரானது 2021 ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில்  ஜூலை மாதத்தில் தொடங்கி  2023 ஆம் வருடத்தின்  மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது . இந்த சுற்றுகளில்  இந்தியா பாகிஸ்தான் இங்கிலாந்து ஆஸ்திரேலியா நியூசிலாந்து  ஸ்ரீலங்கா மேற்கிந்திய தீவுகள் பங்களாதேஷ்  உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டு  டெஸ்ட் போட்டிகளில் விளையாடின.

- Advertisement -

  2021 முதல் 2023 ஆம் ஆண்டிற்கான  டெஸ்ட் சுற்றில்  ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த  ஆஸ்திரேலியா அணி  இந்திய அணி வீரனான டெஸ்ட் தொடரின் போது  வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தொகுதி பெற்றது . இந்த டெஸ்ட் சுற்றின் ஆரம்ப கட்ட போட்டிகளில்  தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள்  தொடர் வெற்றிகளை பெற்று ஆதிக்கம் செலுத்தி வந்தன   ஆனாலும்  பின்னர் நடைபெற்ற போட்டிகளில் அந்த அணிகள் தொடர் தோல்வியை தழுவியதால்  இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை

இந்நிலையில்  ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்  2021 முதல் 2023  ஆண்டிற்கான  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில்  சிறந்த அணியை தேர்ந்தெடுத்து இருக்கிறது . இந்த அணியில் மூன்று இந்தியர்கள் இடம் பெற்று இருக்கின்றனர் . டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர்களான  ரவிச்சந்திரன் அஸ்வின்  மற்றும் ரவீந்திர ஜடே ஆகியோரின் இந்த அணிகளிடம் பெற்றுள்ளனர் .

இந்த ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில்  12 போட்டிகளில் விளையாடி இருக்கும் ரவீந்திர ஜடேஜா 43 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்  மேலும்  673 ரண்களையும் எடுத்துள்ளார்  இவற்றில் இரண்டு சதங்களும்  மூன்று அரை சதங்களும் அடக்கம் . மற்றொரு புறம் ரவிச்சந்திரன் அஸ்வின் 13 போட்டிகளில் விளையாடி  61 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்  மேலும் இரண்டு அரை சதங்களையும் எடுத்துள்ளார் .

- Advertisement -

மேலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்  காயம் காரணமாக சமீப போட்டிகளில் விளையாட வில்லை என்றாலும்  அவரும் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அணி
உஸ்மான் கவஜா
திமுத்து கருநரத்தினே
பாபர் அசாம்
ஜோ ரூட்
டிரவிஸ்  ஹெட்
ரவீந்திர ஜடேஜா
ரிஷப் பண்ட்
ரவிச்சந்திரன் அஸ்வின்
பாட் கம்மின்ஸ் (C)
ரபாடா
ஜேம்ஸ் ஆண்டர்சன்