வரலாற்று சிறப்புமிக்க ஆசஸ் டெஸ்ட் தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா பிளேயிங் லெவனை அறிவித்திருக்கிறது.
இந்த முறை ஆசஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற இருக்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நாளை பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. அதிவேக ஆடுகளத்தை கொண்ட மைதானத்தில் ஆரம்பிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் ஓய்வு பெற்றிருக்கின்ற காரணத்தினால் சரியான தொடக்க வீரர் கிடைக்காமல் தடுமாறி வருகிறார்கள். மேலும் இந்த டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் இருவரும் காயம் காரணமாக விளையாடாதது பின்னடைவாக இருக்கிறது.
அதே சமயத்தில் அதிவேக ஆடுகளத்தில் விளையாட இருக்கின்ற காரணத்தினால் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளுமே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிளேயிங் லெவனை அமைத்திருக்கின்றன.
இந்த நிலையில் தொடக்க இடத்திற்கு 31 வயதான வெதரால்ட், மற்றும் 31 வயதான வேகப் பந்துவீச்சாளர் பிராண்டன் டாகெட் என இருவர் அறிமுகம் ஆகிறார்கள். மேலும் காயத்தால் வெளியில் இருந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்.
இத்துடன் வழக்கம்போல நாதன் லயன் மிட்சல் ஸ்டார்க் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோர் பவுலிங் யூனிட்டில் இடம் பெற்று இருக்கிறார்கள். இந்தப் போட்டிக்கு கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் இருந்து அணியை வழிநடத்துகிறார்.
இதையும் படிங்க: பயிற்சியாளர் களத்தில் விளையாட முடியாது.. மக்கள் அவர் பக்கம் நிக்காம கம்பீரைப் பற்றி யோசிங்க – உத்தப்பா ஆதரவு
ஆஸ்திரேலியா பிளேயிங் XI: உஸ்மான் கவாஜா, ஜேக் வெதரால்ட், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், பிரெண்டன் டாகெட், ஸ்காட் போலண்ட்.