இங்கிலாந்து ODI.. நட்சத்திர ஆஸ்திரேலியா வீரர் காயத்தால் விலகல்.. இந்திய தொடரில் பங்கேற்பதும் சந்தேகம்

0
202
Australia and India

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மாதத்தில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக தற்போது இங்கிலாந்து அணியுடன் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் காயம் அடைந்திருக்கும் நிலையில் அவர் இந்திய தொடரில் பங்கேற்பது சந்தேகமாக இருக்கிறது.

- Advertisement -

இந்த வருடத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மிக முக்கியமாக கருதப்படுகிறது. ஏனென்றால் உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற இந்த இரண்டு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிக முக்கியமானதாக உள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலியா அணி இதற்கு முன்பாக நடைபெற்ற இரண்டு தொடர்களிலும் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியிருப்பதால் அது தற்போது தன்மான பிரச்சனையாக உள்ளது.

எனவே ஆஸ்திரேலியா இந்தத் தொடரில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் சில முன்னணி வீரர்கள் ஓய்வில் இருக்கிறார்கள். ஏனென்றால் இந்திய தொடருக்கு முன்பாக வேறு எந்த தொடரிலும் விளையாடி காயம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இந்த முடிவை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் கவனமாக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியா அணிக்கு ஒரு பின்னடைவாக நட்சத்திர வீரர் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் காயமடைந்து இருக்கிறார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணி டி20 தொடருக்கு பிறகு ஒரு நாள் தொடரில் விளையாடி வரும் நிலையில் ஏற்கனவே இரண்டு போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் மூன்றாவது போட்டியின் போது ஆஸ்திரேலிய அணி வீரர் கேமரூன் கிரீன் முதுகுப்பகுதியில் காயம் அடைந்திருக்கிறார். இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் இந்திய தொடருக்கு முன்பாக வேறு எந்த போட்டிகளிலும் விளையாட மாட்டார் எனவும் தெரிகிறது.

இதையும் படிங்க:குறிக்கிடும் மழை.. போட்டி கைவிடப்பட்டால் இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

இந்த சூழ்நிலையில் இந்திய அணியுடன் ஆன தொடருக்கு முன்பாக கிரீன் குணமடைந்து ஆஸ்திரேலியா அணியில் மீண்டும் இணைவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நம்பர் 4ம் வரிசையில் களமிறங்கி விளையாடி வரும் கிரீன் தேவைப்படும் நேரத்தில் பந்து வீசி அணிக்காக முக்கிய விக்கெட்டுகளையும் எடுத்துக் கொடுப்பார் என்பதையும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -