“ஸ்மித் சாதனை சதத்திற்கு பின் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த இந்தியா” – 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா !

0
747

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இன் இறுதிப்போட்டி தற்போது இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது . இந்தப் போட்டியில் முதலில் ஆடி வரும் ஆஸ்திரேலியா அணி நேற்றைய நாள் ஆட்ட நேரம் முடிவில் 327 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இருந்தது .

இதனைத் தொடர்ந்து இன்று ஆட்டத்தை துவக்கிய ஆஸ்திரேலிய வேகமாக ரன் குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டது . இதனால் அந்த அணியின் விக்கெட்டுகள் சரியா துவங்கின . நேற்று சிறப்பாக ஆடி சதம் எடுத்த டிராவஸ் ஹெட் 174 பந்துகளுக்கு 163 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பரத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார் . இதில் 25 பௌண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும் .

- Advertisement -

நேற்று 95 ரன்கள் உடன் களத்தில் இருந்த ஸ்டீவன் ஸ்மித் இன்று சிறப்பாக ஆடி தனது சதத்தினை நிறைவு செய்தார் . நீ டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 31-வது சதமாகும் மேலும் இந்திய அணிக்கு எதிராக அவர் எடுத்திருக்கும் ஒன்பதாவது சதம் இதுவாகும் .

இந்த சதத்தின் மூலம் இந்திய அணிக்கு எதிராக அதிக சதம் எடுத்தவர்கள் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்திருக்கிறார் ஸ்டீவன் ஸ்மித் . 121 ரன்கள் எடுத்திருந்த அவர் தாக்கூர் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார் . சார்துல் தாக்கூர் வீசிய பந்து அவரது பேட்டில் பட்டு இன்சைட் எட்ஜ் ஆகி ஸ்டம்ப்புகளை பதம் பார்த்தது .

இதனைத் தொடர்ந்து கேமரூன் கிரீன் ஆறு ரண்களிலும் மிச்செல் ஸ்டார்க் ஐந்து ரண்களிலும் ஆட்டம் இழந்தனர் . அலெக்ஸ் கேரி மட்டும் ஒரு முனையில் நின்று ரண்களை குவித்துக் கொண்டிருந்தார் . அவரும் 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார்.

- Advertisement -

லியான் ஒன்பது ரன்களிலும் பேட் கம்மின்ஸ் 9 ரன்கள்ிலும் ஆட்டம் இழக்க ஆஸ்திரேலியா 469 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது . இந்தியாவின் பந்துவீச்சில் முகமது சிராஜ் நான்கு விக்கெட்டுகளையும் முகமது சமி மற்றும் தாக்கூர் தலா இரண்டு விக்கெட்களையும் ரவீந்திர ஜடேஜா ஒருவிக்கட்டையும் வீழ்த்தினர்.