இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடும் நிலையில் வருகிற 22ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் அதற்கு முன்னதாக நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலிய ஏ அணிகள் விளையாடி வரும் நிலையில் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 31ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் 47.4 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக மிடில் வரிசை பேட்ஸ்மேன் படிக்கல் 36 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணி 62.4 ஓவர்களில் 195 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் மெக் ஸ்வீனே 39 ரன்கள் குவித்தார். பந்துவீச்சில் இந்திய அணியின் முகேஷ் குமார் அபாரமாக பந்துவீசி 18.4 ஓவர்களில் 6 ஓவர் மெய்டனுடன் 46 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதற்குப் பின்னால் தனது இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய இந்திய அணியில் மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி 103 ரன்கள் குவிக்க அவருக்கு பக்கபலமாக மிடில் வரிசை பேட்ஸ்மேன் படிக்கல் 88 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு விக்கெட் கீப்பர் இஷான் 32 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 100 ஓவர்கள் முடிவில் 312 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் இந்த போட்டியில் நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அதனை கவனித்த நடுவர் பந்தை மாற்றுமாறு இந்திய அணியிடம் வலியுறுத்தினார். புதிய பந்தினை மாற்றினால் ஆட்டத்தின் போக்கில் மாற்றம் ஏற்படும் என்று கணித்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் “நாம் இந்த பந்தில் விளையாட வேண்டுமா? இது மிகவும் முட்டாள்தனமான முடிவு” என்று தனது கேள்வியை முன் வைத்தார்.
இதையும் படிங்க:329 ரன்.. 15 பந்து மீதி.. 9 பவுலர்களை இறக்கிய இங்கிலாந்து அணி.. வெஸ்ட் இண்டீஸ் ஷாய் ஹோப் சதம் வீண்.. 2வது ODI
இதனை கவனித்த நடுவர் கிரேக் இசான் கிஷானின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றினார். அதாவது “உங்கள் பொருத்தமற்ற விவாதத்தினால் உங்கள் மீது புகார் அளிக்கப் போகிறேன். இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது” என்று கூறி இருக்கிறார். ஏற்கனவே பிசிசிஐயின் நடவடிக்கைகளால் சிக்கலில் இருக்கும் இசான் கிஷானுக்கு தற்போது மேலும் ஒரு சிக்கலை ஏற்படுத்தியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.