329 ரன்.. 15 பந்து மீதி.. 9 பவுலர்களை இறக்கிய இங்கிலாந்து அணி.. வெஸ்ட் இண்டீஸ் ஷாய் ஹோப் சதம் வீண்.. 2வது ODI

0
1045

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருந்தது.

இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சவாலான ரன்களை நிர்ணயித்தும் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி அபாரமாக சேஸ் செய்தது.

- Advertisement -

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது ஒருநாள் போட்டி

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் ஒரு நாள் தொடரில் விளையாடும் நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொண்டு 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிதரப்பில் தொடக்க விக்கெட்டுகள் விரைவில் வெளியேறினாலும், அதற்குப் பிறகு களம் இறங்கிய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர்.

கேசி கேர்ட்டி 71 ரன்கள், கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன சாய் ஹோப் அபாரமாக விளையாடினார். 127 பந்துகளை எதிர்கொண்டு எட்டு பௌண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 117 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு களம் இறங்கிய ரூதர் போர்டு அதிரடியாக விளையாடி 56 ரன்கள் குவித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 328 ரன்கள் குவித்த சவாலான இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்தது. இதில் குறிப்பாக இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை வெளியேற்ற 9 பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டன் அபார சதம்

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களம் இறங்கியது. பேட்டிங்கை பொறுத்தவரை மிக வலுவான இங்கிலாந்து அணி இந்த முறையும் தனது திறமையை நிரூபித்தது. தொடக்க ஆட்டக்காரர் விக்கெட் கீப்பர் சால்ட் 59 ரன்களில் வெளியேற, மிடில் வரிசையில் களமிறங்கிய பெத்தல் 57 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் லிவிங்ஸ்டன் 85 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஐந்து பௌண்டரிகள் மற்றும் 9 சிக்சர்கள் என 124 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதையும் படிங்க:150 ரன் ஈஸி இல்ல.. கம்பீர் இத பண்ணா மட்டும்தான் இந்திய அணி ஜெயிக்க முடியும் – பாகிஸ்தான் பசித் அலி பேட்டி

இதனால் இங்கிலாந்து அணி 47.3 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் குவித்து 15 பந்துகள் மீதம் வைத்து ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதம் அடித்த இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு சிறப்பாக உதவிய லிவிங்ஸ்டன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 6ம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -