“ஆஸிகிட்ட 7 பேர் இருக்காங்க.. ஜெயிக்க அவங்களுக்கு தெரியும்!” – நாசர் ஹுசைன் எச்சரிக்கை!

0
1035
Australia

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியா அணி, இந்த உலகக் கோப்பை தவிர்த்து இதுவரையில் ஏழு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

மேலும் ஏழு முறை தகுதி பெற்றதில் ஐந்து முறை உலக சாம்பியன் ஆக வந்திருக்கிறது. ஆஸ்திரேலியா அணிக்கு ஐசிசி தொடர்களை வெல்வது என்பது ஒரு வாடிக்கையான விஷயமாக பழக்கப்பட்டதாக மாறியிருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்தை பொறுத்த வரை அவர்கள் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக விளையாடும் எல்லா தொடர்களையும், உலகக் கோப்பை தொடருக்கு எவ்வாறு தயாராவது என்பதற்காகவே விளையாடுவார்கள்.

பெரும்பாலும் ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் இரண்டு நாடுகளுக்கு இடையே நடைபெறும் தொடர்களில் ஏற்படும் தோல்விகள் குறித்து கவலைப்படாது. அவர்கள் அந்த நேரத்தில் எதிர்காலத்திற்கான வீரர்களை உருவாக்க வேலைகளைச் செய்வார்கள்.

எனவே உலகக் கோப்பையில் மற்றும் உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது என்றால் யாரும் அதை எந்த காலத்திலும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் இதற்காகவே தயாராகி வரக்கூடியவர்கள்.

- Advertisement -

தற்பொழுது 13 வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இன்று ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்திய அணி அகமதாபாத் மைதானத்தில் விளையாட இருக்கிறது.

எனவே ஆஸ்திரேலியா அணி குறித்து பேசி உள்ள நாசர் ஹுசைன் கூறும்பொழுது “ஆஸ்திரேலியாவுக்கு போட்டிகளை எப்படி வெல்வது என்று தெரியும். 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியிலிருந்து தற்போது ஏழு பேர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் சிறந்த ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பை வென்றதை பார்த்து வளர்ந்தவர்கள்.

ஒரு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரராக நீங்களும் அதையே செய்ய விரும்புவீர்கள். இங்கு விராட் கோலிக்கு மக்கள் உற்சாகமாக குரல் எழுப்புவதை பாருங்கள். அவர்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதுதான் ஆஸ்திரேலியா தரப்பின் மனதிலும் இருக்கும்.

இங்கு உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எதுவும் கிடையாது. நீங்கள் அதற்கு எப்படி திருப்பி பதில் கூறினீர்கள் என்பது தான் விஷயம். இந்த உலகக்கோப்பையில் முதல் இரண்டு போட்டிகளில் கம்மின்ஸ் தோற்ற பொழுது அவரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அவருடைய தனிப்பட்ட பார்மும் சரியில்லை. ஆனால் அவர் எல்லா விஷயங்களையும் மாற்றி அமைத்திருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!