7வது முறை சாம்பியன்ஸ் ; ஐசிசி உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஆஸ்திரேலியா

0
139
Australia Womens Champions CWC 2022

2022ஆம் ஆண்டிற்கான மகளிர் உலக கோப்பைதொடர் சற்று முன்னர் நடந்து முடிந்தது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர்.

அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலிய அணியின் ஓபனிங் வீராங்கனை அலிஸா ஹீலி 138 பந்துகளில் 26 பவுண்டரி அடித்து 170 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக ரேச்சல் ஹைன்ஸ் 68 ரன்களும், பெத் மூனி 62 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

அதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி 43.4 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் மட்டுமே குவித்தனர். இங்கிலாந்து மகளிர் அணியில் நடாலி ஸ்கைவர் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 148* ரன்கள் குவித்தார்.

ஆஸ்திரேலியா மகளிர் அணியில் மிகச்சிறப்பாக பந்து வீசிய அலனா கிங் மற்றும் ஜெஸ் ஜோனஸன் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

உலக கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அவுஸ்திரேலிய அணி

1973 முதல் தற்போது வரை மொத்தமாக 12 உலக கோப்பை தொடர் நடை பெற்றிக்கிறது. அதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணி மட்டும் 7 முறை (1978,1982,1988,1997,2005,2013,2022) வென்றுள்ளனர். ஆஸ்திரேலியா அணிக்கு அடுத்த படியாக இங்கிலாந்து அணி 4 முறையும்(1973,1993,2009,2017) நியூசிலாந்து அணி ஒரு முறையும்(2000) வென்றுள்ளது.

- Advertisement -

குறிப்பாக இந்த உலக கோப்பை தொடரில் முதல் போட்டியிலிருந்து இறுதி போட்டி வரை மொத்தமாக 9 போட்டியிலும் தோல்வி பெறாத அணியாக ஆஸ்திரேலியா அணி புதிய சாதனை படைத்துள்ளது.

2020ஆம் ஆண்டு நடந்த மகளிர் உலககோப்பை டி20 தொடர், 2021ஆம் ஆண்டு நடந்த ஆண்களுக்கான உலககோப்பை டி20 தொடர், தற்போது நடந்து முடிந்துள்ள மகளிர் உலககோப்பை தொடர் என தொடர்ச்சியாக அவுஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.