AUS vs WI.. 64 பந்து.. 20 ஃபோர்.. 213 ரன்.. உலக சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி!

0
7705
Matthews

இன்று பெண்கள் டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி மகத்தான ஒரு உலகச் சாதனையை படைத்திருக்கிறது!

இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா தனது ஆதிக்கத்தை செலுத்தியது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் அலெசா ஹீலி முதல் பந்தலிலேயே கோல்டன் டக் அடித்து வெளியேறினார். பெத் மூனி 29 பந்துகளில் 22 ரன்கள், தாகிலா மெக்ராத் 4, ஆஸ்லி கார்டனர் 2 என முன்னணி நட்சத்திர வீராங்கனைகள் வெளியேறினார்கள்.

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த எலிஸ் பெரி மற்றும் லிட்ச்ஃபீல்டு இருவரும் அதிரடியான பேட்டிங்கில் மிரட்டினார்கள். எலிஸ் பெரி 46 பந்தில் 70 ரன்கள், லிட்ச்ஃபீல்டு 19 பந்துகளில் 52 ரன்கள், கடைசிக்கட்டத்தில் ஜார்ஜியா வர்ஹாம் 13 பந்தில் 32 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹைலி மேத்யூஸ் நான்கு ஓவர்களில் 36 ரன்களுக்கு மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

பெரிய இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மீண்டும் பேட்டிங்கில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹைலி மேத்யூஸ் அதிரடியில் மிரட்டினார். 64 பந்துகளை சந்தித்த அவர் 20 பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 132 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

இவருக்கு உறுதுணையாக மூத்த வீராங்கனை ஸ்டெபானி டெய்லர் 41 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இறுதியில் 19.5 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று விக்கெட் மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சர்வதேச பெண்கள் டி20 கிரிக்கெட் இல் சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு இதுவாகும். இந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி உலக சாதனை படைத்திருக்கிறது. மேலும் t20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஏழாவது முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஹைலி மேத்யூஸ் ஆட்டநாயக விருது பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது!