போட்டியின் நடுவே சிகரெட் லைட்டர் கேட்டு அதிர்ச்சியை கிளப்பிய ஆஸி., வீரர்; பகீரென மிரண்டுபோன சக அணி வீரர்கள் – வீடியோவில் அம்பலம்!

0
235

போட்டியின் நடுவே சிகரெட் லைட்டர் கேட்டு அதிர்ச்சியளித்துள்ளார் ஆஸி., வீரர் மர்னஸ் லபுச்சானே. இதன் வீடியோ டிரெண்ட் ஆகியுள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்கா அணி. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 2-0 என தொடரை கைப்பற்றிவிட்டது.

- Advertisement -

மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் டிசம்பர் 4ஆம் தேதி துவங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது ஆஸ்திரேலிய அணி. கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்திய வார்னர், இன்றைய போட்டியின் முதல் இன்னிங்சில் 10 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கவஜா மற்றும் மார்னஸ் இருவரும் 135 ரன்கள் சேர்த்தனர். இதில் மார்னஸ் 79 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். 54 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் கவாஜா. இவருடன் ஒரு பந்து கூட பிடிக்காமல் ஸ்டீவன் ஸ்மித் களத்தில் இருந்தபோது போட்டியின் நடுவே மழையை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. அதற்கு சிறிது நேரம் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது.

இன்றைய நாள் ஆட்டம் முடிவடைய இன்னும் கிட்டத்தட்ட 30 ஓவர்கள் இருக்கின்றன. அதற்குள் இப்படி நடந்தது சற்று ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. இந்த போட்டியின் நடுவே சில சுவாரசியமான நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.

- Advertisement -

அதில் ஒன்றாக, மர்னஸ் லபுச்சானே எதிர்கொண்ட பந்து அவரது ஹெல்மெட்டில் பட்டதால் சிறிய அளவில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. அதை சரி செய்வதற்கு போட்டியை நிறுத்தி சிகரெட் லைட்டர் கொண்டுவரும் படி கேட்டிருக்கிறார். அதற்காக அவர் கொடுத்த சிக்னல் பலராலும் பேசப்பட்டு வருகிறது.

ஹெல்மெட்டை சரி செய்த பிறகு மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்தார். துரதிஷ்டவசமாக 79 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறிய அடுத்த நிமிடமே மழை வரத்துவங்கி போட்டி தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -