AUS vs SA.. 392 ரன்.. அதிரடி காட்டிய ஆஸி.. 10 நாளில் 5 வெற்றி.. தென் ஆப்பிரிக்கா அணிக்கு நடந்த சோகம்!

0
1468
Labuschagne

தற்பொழுது ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்கா நாட்டில் முகாமிட்டு இருக்கிறது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

நேற்று இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் வார்னர் இருவரும் சேர்ந்து முதல் விக்கட்டுக்கு அதிரடியாக 11.5 ஓவரில் 15 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். டிராவிஸ் ஹெட் 36 பந்தில் 64 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

மிகச் சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 85 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்து, 93 பந்தில் 106 ரன்களுக்கு வெளியேறினார். முதல் போட்டியில் கலக்கிய மார்னஸ் லபுசேன் இந்த போட்டியிலும் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 99 பந்துகளில் 124 ரன்கள் அதிரடியாக சேர்த்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஜோஸ் இங்கிலீஷ் 37 பந்தில் 50 ரன்கள் அடித்தார்.

ஒரு கட்டத்தில் 400 ரன்களுக்கு மேல் ஆஸ்திரேலியா அணி குவிக்கும் என்கின்ற நிலை இருந்தது. ஆனால் பின்வரிசை வீரர்கள் யாரும் சரியாக விளையாடாத காரணத்தினால், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 392 ரன்கள் குதித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஷம்சி பத்து ஓவர்களில், 61 ரன்கள் தந்து, நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கடுத்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் குயிண்டன் டி காக் 45, மற்றும் கேப்டன் டெம்பா பவுமா 46 என நல்ல துவக்கம் தந்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து ஹென்றி கிளாசன் 49, டேவிட் மில்லர் 49 என ரன் எடுத்து வெளியேறினார்கள்.

இதைத் தவிர தென் ஆப்பிரிக்கா தரப்பில் பதிலடித்தரும் விதமான பேட்டிங் யாரிடம் இருந்தும் வரவில்லை. இறுதியாக 41.5 ஓவரில் தென் ஆப்பிரிக்க அணி 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆடம் ஜாம்பா பத்து ஓவர்களுக்கு, 1 மெய்டன் செய்து, 48 ரன் விட்டு தந்து, நான்கு விக்கெட் கைப்பற்றினார். ஆஸ்திரேலியா 123 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த பத்து நாட்களில் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஐந்து வெற்றிகளை பெற்றுள்ளது.