AUS vs PAK.. 23 ஓவர் பார்ட் டைமர்.. 351 ரன்.. பாகிஸ்தானுக்கு இரண்டாவது போட்டியிலும் பரிதாபம்!

0
514
Australia

இன்று இந்தியாவில் நடைபெற இருக்கும் 13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்கள் முடிவுக்கு வருகின்றன. இந்தியாவுக்கு நெதர்லாந்து உடன் திருவனந்தபுரத்தில் இருந்த பயிற்சி ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி முழுமையாக நடைபெற்று முடிந்திருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு வார்னர் 48, மார்ஸ் 31, ஸ்மித் 27, லபுஷன் 40, அலெக்ஸ் கேரி 11, மேக்ஸ்வெல் 77, கேமரூன் கிரீன் 50, ஜோஸ் இங்கிலீஷ் 48, கம்மின்ஸ் 2 என ரன்கள் எடுக்க 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் உசாமா மிர் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு இமாம் உல் ஹக் 16, பகார் ஜமான் 22, அப்துல்லா ஷபிக் 12, இப்திகார் அகமது 88, சதாப்கான் 9, பாபர் அசாம் 90, முகமது நவாஸ் 50, ஆகா சல்மான் 10, உசாமா மிர் 15, ஹசன் அலி 16, முகமது வாசிம் 4 என 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலிய தரப்பில் லபுசேன் மூன்று விக்கெட் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் ஸ்மித் வார்னர் என்று ஆஸ்திரேலியா தரப்பில் பலர் பந்து வீசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேக்ஸ்வெல் உடன் சேர்ந்து ஆஸ்திரேலியா தரப்பில் பார்ட் டைமர்கள் 23 ஓவர்கள் இந்த போட்டியில் வந்து வீசி இருக்கிறார்கள். இதன் காரணமாக பாகிஸ்தான் அணியாய் இலக்கை நோக்கி பயணிக்க முடிந்தது.

- Advertisement -

இறுதியில் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் திரும்ப, ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டு பாகிஸ்தான அணி விக்கெட்டுகள் சீக்கிரத்தில் விழ ஆரம்பித்து பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.

இதற்கு அடுத்து நாளை மறுநாள் அக்டோபர் ஐந்தாம் தேதி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ள, பிரம்மாண்டமாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆரம்பிக்க இருக்கிறது!