AUS vs NED.. 14 ஓவரில் 6 விக்கெட்.. இந்திய அணிக்கு வார்னிங் கொடுத்த ஆஸி.. பயிற்சி போட்டியில் அதிரடி மாற்றங்களால் அசத்தல்!

0
14373
Australia

இன்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை பயிற்சி போட்டி மழையால் ரத்தான நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி 23 ஓவர்கள் கொண்ட போட்டியாக மழையின் காரணமாக நடத்தப்பட்டது!

இன்று இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு வழக்கமான துவக்க ஆட்டக்காரர்கள் அனுப்பி வைக்கப்படவில்லை. ஸ்மித் மற்றும் ஜோஸ் இங்கிலீஷ் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்மித் 55, ஜோஸ் இங்கிலீஷ் 0, அலெக்ஸ் கேரி 28, கிளன் மேக்ஸ்வெல் 5, கேமரூன் கிரீன் 34, மிட்சல் ஸ்டார்க் 24*, கம்மின்ஸ் 1, மேத்யூ ஷார்ட் 5, மார்னஸ் லபுஷன் 3 ரன்கள் எடுக்க 23 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.

இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணிக்கு மிட்சல் ஸ்டார்க் ஆரம்பத்திலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்து உலகக் கோப்பை எப்படியானதாக இருக்கும் என்று தெரியப்படுத்தினார். பந்து ஸ்விங் ஆன நிலையில் நெதர்லாந்து பேட்ஸ்மேன்களுக்கு என்ன செய்வது என்று சுத்தமாக புரியவில்லை.

நெதர்லாந்து அணியைப் பொருத்தவரை யாரும் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. அந்த அணி 14.2 ஓவர்களில் ஆரம்பிக்கக் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்திருந்த பொழுது மீண்டும் மழை வர ஆரம்பித்தது. ஆரம்பித்த மழை உடனுக்குடன் வேகமாக மாறியது.

- Advertisement -

மேற்கொண்டு நேரமாகி இருந்த காரணத்தினால் போட்டியை தொடர முடியாது என்பதனால் போட்டியை முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. பயிற்சி போட்டி என்கின்ற காரணத்தினால் இதில் வெற்றி தோல்வி மழைக்குப் பார்க்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 3 ஓவர்கள் பந்துவீசி 18 ரன்கள் தந்து மூன்று விக்கெட் வீழ்த்தி இருந்தார். இந்த போட்டியில் பந்து வீசாமல் இருந்த மார்ஸ் பந்துவீசி ஒரு விக்கெட் வீழ்த்தினார். மேலும் லபுசேன் பந்து வீசி ஒரு விக்கெட் வீழ்த்தினார். மேலும் பேட்டிங் செய்கையில் ஸ்டார்க் மேல் வரிசையில் அனுப்பி வைக்கப்பட்டார். பயிற்சி போட்டியை ஆஸ்திரேலிய சிறந்த பயிற்சியாகப் பயன்படுத்தி இருக்கிறது!