கேப்டனான முதல் டெஸ்ட்டிலேயே வரலாற்று சாதனை படைத்துள்ள பேட் கம்மின்ஸ் – 147 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து

0
274
Pat Cummins 5 fer in First Ashes Test

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. காபாவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். போட்டியின் முதல் பந்திலேயே மிட்செல் ஸ்டார்க் வீசிய அற்புதமான பந்தில் ரோரி பர்ன்ஸ் டக் அவுட் ஆகினார்.

பின்னர் வந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நிதானமாக நிலைத்து நின்று ஆடாத காரணத்தினால் 50.1 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி தற்பொழுது குவித்துள்ளது.

- Advertisement -

கேப்டனாக முதல் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே அசத்திய பேட் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக பேட் கம்மின்ஸ் சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷஸ் டெஸ்ட் தொடரில், இன்று தன்னுடைய கேப்டன் பதவியை அவர் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறார். முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை (five wicket Haul) கைப்பற்றி, தனது கேப்டன் பணியை கனகச்சிதமாக செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆஸ்திரேலிய அணியில் கடந்த 39 வருடங்களில் எந்த ஒரு கேப்டனும் டெஸ்ட் போட்டியில் ஃபைஃபர் (five wicket haul) கைப்பற்றியதில்லை. ஆனால் இன்று அந்த சாதனையை பேட் கம்மின்ஸ் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சில் மூலமாக நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார். இன்று 13.1 ஓவர்கள் வீசி 38 ரன்களை மட்டுமே கொடுத்து, 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

அது மட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளில் 57 விக்கெட்டுக்களை கைப்பற்றி, தான் தான் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் என்பதை மீண்டும் தன்னுடைய நேர்த்தியான பந்துவீச்சின் மூலமாக அவர் இன்று பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக அவருடைய பௌலிங் ஆவெரேஜ் 20.59 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 44.3 என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -