ஸ்மித் சதம்.. ஆஸ்திரேலியா 416 ரன்கள்.. இதற்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் வலுவான நிலை!

0
4615

முதல் இன்னிங்சில் ஸ்மித் சதமடிக்க, ஆஸ்திரேலியா அணி 416 குவித்தது. இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் அடித்துள்ளது. 138 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாள் முடிவில் வார்னர் 66 ரன்கள், ஹெட் 78 ரன்கள் அடித்து அவுட்டாகினர். ஸ்மித் 85 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி 339 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்திருந்தது.

- Advertisement -

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் பேட்டிங் வந்தனர். அலெக்ஸ் காரி 22 ரன்கள் அடுத்து வந்த நீச்சல் ஸ்டார் ஆறு ரன்களுக்கு ஆட்டம் கலந்தவுடன் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை நானூறு ரண்களுக்குள் சுருட்டி விடும் என எதிர்பார்த்திருந்தபோது ஸ்மித் சற்று அதிரடியாக விளையாட ஆரம்பித்து சதம் அடித்தார் டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் அடிக்கும் 32 வது சதம் இதுவாகும்.

இறுதியாக ஸ்மித் 110 ஆண்டுகளுக்கு அவுட் ஆகினார். ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் கம்மின்ஸ் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இங்கிலாந்து அணி சார்பில் ராபின்சன், ஜோஷ் டாங் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். ஜோ ரூட் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

இதனையடுத்து முதல் இன்னிங்சில் பேட்டிங் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலி மற்றும் பென் டக்கட் இருவரும் ஓபனிங் இறங்கினர். வழக்கம்போல அதிரடியான அணுகுமுறைகள் இறங்கிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 18 ஓவர்களுக்குள்ளேயே 91 ரன்கள் அடித்தது.

48(48) ரன்களில் இறந்த கிராலி விக்கெட்டை சுழல் பந்துவீச்சாளர் நேதன் லையன் வீழ்த்தினார். அடுத்ததாக ஆலி போப் உள்ளே வந்தார். இவர் பென் டக்கட் உடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 97 ரன்கள் சேர்க்க உதவினார். 63 பந்துகளில் 42 ரன்கள் அடித்திருந்த ஆலி போப், வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் பந்தில் அவுட் ஆனார்.

மறுபக்கம் அதிரடியாக ஆடிவந்த துவக்க வீரர் பென் டக்கட் 98 ரன்கள் அடித்திருந்தபோது துரதிஷ்டவசமாக அவுட் ஆகினார். இதன் மூலம் சதம் அடிக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டார். பின்னர் வந்த நட்சத்திர வீரர் ஜோ ரூட் உள்ளே வந்ததிலிருந்தே தடுமாற்றத்துடன் விளையாடினார். இவரும் நீண்ட நேரம் இருக்கவில்லை. 10 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

222 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்திருந்த போது, கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி புரூக் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இரண்டாம் நாள் முடியும் வரை இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறியது ஆஸ்திரேலியா அணி. நாள் முடிவில் இந்த ஜோடி 56 ரன்கள் சேர்த்திருந்தது.

ஹாரி புரூக் 45 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 17 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இரண்டாம் நாள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 278 ரன்கள் அடித்திருந்தது இங்கிலாந்து அணி, தற்போது 138 ரன்கள் பின்தங்கியுள்ளது.