உலக கிரிக்கெட்

46/4.. சரிந்த பாகிஸ்தான் அணி.. காப்பாற்றிய ஷகீல் ரிஸ்வான்.. வெஸ்ட் இண்டீஸ் அபார பந்துவீச்சு.. முதல் டெஸ்ட்

தற்போது பாகிஸ்தான் அணி உள்நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட சரிவிலிருந்து தப்பித்து மீண்டிருக்கிறது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது பாகிஸ்தானுக்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த இரண்டு அணிகளுமே ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தகுதியை இழந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த தொடர் எந்த விதத்திலும் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

பாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்ட சரிவு

இந்த போட்டி இரு அணிகளுக்கும் இடையே இன்று முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பழைய பாணிக்கு திரும்பியிருக்கும் பாகிஸ்தான் இந்த போட்டிக்கான ஆடுகளத்தையும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக தயார் செய்திருப்பதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ஷான் மசூத் 11, முகமத் ஹுரைரா 6, நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம் 8, கம்ரன் குலாம் 5 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேற்றினார்கள். பாகிஸ்தான அணி 46 ரன்னுக்கு முக்கிய நான்கு விக்கெட்டுகளை இழந்து மீண்டும் உள்நாட்டில் பெரிய சரிவை போட்டியில் சந்தித்தது.

- Advertisement -

காப்பாற்றிய ஐந்தாவது விக்கெட் ஜோடி

இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த இளம் வீரர் சவுத் ஷகீல் மற்றும் அனுபவ விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் இருவரும் பாகிஸ்தான் அணியை கொஞ்சம் கொஞ்சமாக சரிவில் இருந்து காப்பாற்றி மேலே கொண்டு வந்தார்கள். இன்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. சவுத் ஷகீல் 56* (100) மற்றும் முகமது ரிஸ்வான் 51 (80) ரன்கள் எடுத்தார்கள்.

இதையும் படிங்க: இந்திய வீரர்கள் பிரிய காரணம் பிசிசிஐதான்.. எப்படி முதலில் இதை அனுமதித்தீர்கள்? – இர்பான் பதான் கேள்வி

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இந்த போட்டியில் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக முதல் இரண்டு செசன் போட்டி தடைபட்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இன்றைய நாளில் பாகிஸ்தான் அணி 41.3 ஓவர்கள் மட்டுமே விளையாடியது!

- Advertisement -
Published by

Recent Posts