உலக கிரிக்கெட்

330/2.. கவாஜா சதம்.. ஸ்மித் ஸ்பெஷல் சாதனை சதம்.. இலங்கை அணியை திணறவிட்ட ஆஸி – முதல் டெஸ்ட்

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் உஸ்மான் கவாஜா மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சதத்தின் உதவியுடன் இரண்டு விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்து வலிமையான நிலையில் இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது ஆஸ்திரேலியா அணி ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதால், மேலும் கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு சிறிய காயம் இருப்பதாலும் அவர் இந்த தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிராவிஸ் ஹெட் – உஸ்மான் கவாஜா அசத்தல்

இன்று காலே மைதானத்தில் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரராக உஸ்மான் கவாஜா உடன் டிராவிஸ் ஹெட் களம் அனுப்பப்பட்டார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 88 பந்துகளில் 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. டிராவிஸ் ஹெட் 40 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உடன் 57 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து வந்த மார்னஸ் லபுசேன் 50 பந்தில் இரண்டு பவுண்டரிகள் உடன் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் களம் இறங்கினார். ஒரு முனையில் சிறப்பாக விளையாடி வந்த உஸ்மான் கவாஜா சதம் அடித்து அசத்தினார். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக செயல்பட்டு இருந்த உஸ்மான் கவாஜா ஃபார்முக்கு திரும்பினார்.

- Advertisement -

ஸ்டீவ் ஸ்மித் சாதனை

இதைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட் பத்தாயிரம் ரன்கள் கடந்தார். இதற்கு அவர் மொத்தம் 205 டெஸ்ட் இன்னிங்ஸ்கள் எடுத்திருக்கிறார். இந்த வகையில் அவர் பத்தாயிரம் கண்களை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக எடுத்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். 195 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் பத்தாயிரம் ரன்கள் எடுத்து முதல் இடத்தில் சச்சின், லாரா மற்றும் சங்ககாரா ஆகியோர் இருக்கிறார்கள். 196 இன்னிங்ஸில் ரிக்கி பாண்டிங் இருக்கிறார்.

இதையும் படிங்க : ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்.. டாப் 5 க்கு சென்ற வருண் சக்கரவர்த்தி.. திலக் வர்மா முன்னேற்றம்.. சரிந்த சஞ்சு சாம்சன்

இன்றைய நாள் முடிவில் உஸ்மான் கவாஜா ஆட்டம் இழக்காமல் 147 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் ஆட்டம் இழக்காமல் 104 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். இந்த ஜோடி ஆட்டம் இழக்காமல் 307 பந்துகளில் 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது. தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 330 ரன் குவித்திருக்கிறது.

- Advertisement -
Published by