இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இருப்பினும் இந்திய அணி இந்த போட்டியில் பேட்டிகள் சொதப்பியதால் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் சர்வதேச டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு வரும் தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி டி20 பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் தற்போது ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
வருண் சக்கரவர்த்தி, திலக் வர்மா முன்னேற்றம்:
33 வயதான வருண் சக்கரவர்த்தி 25 இடங்கள் முன்னேறி தற்போது ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் 679 என்ற ரேட்டிங்கை அவர் பெற்றுள்ளார். இதேபோன்று பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட இந்திய வீரர் திலக் வர்மா, டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
திலக் வர்மா தற்போது 832 புள்ளிகளை பெற்று இருக்கிறார். முதலிடத்தில் டிராவிஸ் ஹெட் 855 புள்ளிகள் உடன் இருக்கின்றார். திலக் வர்மா இந்த தொடரில் மூன்று போட்டியில் விளையாடி 109 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரியும் 109 ஆகும். சென்னையில் நடைபெற்ற டி20 போட்டியில் அதிகபட்சமாக 72 ரன்கள் அடித்திருந்தார்.
மற்ற இந்திய வீரர்களின் இடம்:
இங்கிலாந்து வீரர் பில் சால்ட் ஒரு இடங்கள் சரிந்து மூன்றாம் இடத்திலும்,சூரியகுமார் நான்காவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றார். இதேபோன்று டி20 போட்டிகளில் இடம் பெறாத ஜெய்ஷ்வால் ஒன்பதாவது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்திய அணியில் சேர்க்கப்படாத ருதுராஜ் இரண்டு இடங்கள் சரிந்து 16வது இடத்திலும் உள்ளனர்.
தென்னாப்பிரிக்க தொடரில் அபாரமாக செயல்பட்ட சஞ்சு சாம்சன் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பெரிய ஸ்கோர் சேர்க்க தடுமாறினார். இதன் காரணமாக அவர் 12 இடங்கள் சரிந்து 29 வது இடத்தில் உள்ளார். இந்த நிலையில் கொல்கத்தா டி20 போட்டிகள் அபாரமாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 59 இடங்கள் முன்னேறி 40 வது இடத்தை பிடித்திருக்கிறார்.
டி20 போட்டிகளுக்கு ஆன பவுலர்கள் பட்டியலில் ஆதில் ரசித் முதலிடத்தில் உள்ளார். ஆர்ஸ்தீப் சிங் எட்டாவது இடத்திலும், ரவி பிஸ்னாய் ஐந்து இடங்கள் சரிந்து பத்தாவது இடத்திலும், அக்சர் பட்டேல் ஐந்து இடங்கள் முன்னேறி 11-வது இடத்திலும் இருக்கிறார்கள்.