42 ஓவரில் அசால்ட் சேஸ்.. நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றி.. புள்ளி பட்டியலில் அதிரடி.. பங்களாதேஷ் பரிதாபம்!

0
379
Williamson

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்த போட்டிக்கு நியூசிலாந்து அணிக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் திரும்பினார். தொடக்க வீரர் வில் எங் வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

டிரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் லிட்டன் தாஸ் மேட் ஹென்றி இடம் கேட்ச் கொடுத்து பரிதாபமாக வெளியேறினார். இதற்கு அடுத்து டன்சித் ஹசன் 16, மெகதி ஹசன் மிராஸ் 30, நஜிபுல் சாந்தோ 7 ரன்களுக்கு வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து அனுபவ வீரர்கள் முஸ்பிகியூர் ரஹீம் மற்றும் கேப்டன் சகிப் அல் ஹசன் இருவரும் இணைந்து நிதானமாக அணியை மீட்டெடுக்க ஆரம்பித்தார்கள். இந்த ஜோடி 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 40 ரன்களில் ஷகிப் அல் ஹசன் வெளியேறினார்.

இதற்கடுத்து நிலைத்து விளையாடிய முஸ்பிக்யூர் ரஹீம் 60, தவ்ஹித் ஹ்ரிடாய் 13, டஸ்கின் அகமத் 17, முஸ்தஃபிஷர் ரஹ்மான் 4, சோரிஃபுல் இஸ்லாம் 2* ரன்கள் எடுக்க, கடைசிக் கட்டத்தில் அதிரடி காட்டிய முகமதுல்லா இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 41 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு பங்களாதேஷ் அணி 245 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் போல்ட் மற்றும் ஹென்றி தலா இரண்டு விக்கெட்டுகள், லாக்கி பெர்குசன் மூன்று விக்கெட்டுகள், சான்ட்னர் மற்றும் பிலிப்ஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ரச்சின் ரவீந்தரா 9, டெவோன் கான்வே 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன் 107 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஓய்வில் சென்றார். காயமா? என்பது குறித்து விபரம் தெரிவிக்கப்படவில்லை.

பேட்டிங்கில் நான்காவதாக வந்த டேரில் மிட்சல் 67 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் அணியின் வெற்றியை 42.5 ஓவரில் உறுதி செய்தார். இவருடன் கிளன் பிலிப்ஸ் ஆட்டம் இழக்காமல் 16 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து அணிக்கு நடப்பு உலகக் கோப்பையில் மூன்றாவது போட்டியில் தொடர்ச்சியாக இது மூன்றாவது வெற்றியாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை கீழே இறக்கி முதலிடத்திற்கு சென்று இருக்கிறது. இந்தியா மூன்றாவது இடத்தில் தொடர்கிறது. பங்களாதேஷ அணிக்கு இது மூன்றாவது ஆட்டத்தில் இரண்டாவது தோல்வியாகும்.