ஏசியன் கேம்ஸ்.. 115 ரன்.. 17 ஓவரில் விழுந்த பாகிஸ்தான்.. இந்தியாவுடன் இறுதி போட்டியில் ஆப்கான்!

0
1779
Afghanistan

தற்போது சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 கிரிக்கெட் வடிவத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பெண்களுக்கு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டு இந்தியா தங்கப்பதக்கம் வென்றது.

இந்த நிலையில் இன்று ஆண்களுக்கான கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை 9.2 ஓவர்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

மேலும் ஒரு இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு யாரும் பெரிய பங்களிப்பை கொடுக்கவில்லை. துவக்க ஆட்டக்காரர் ஓமர் யூசுப் 24 எடுத்த ரன்கள்தான் அதிகபட்ச ரன்னாக அமைந்தது. இவருக்கு அடுத்து ஆமீர் ஜமால் எடுத்த 14 ரன்கள் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் ஆகும்.

பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பரித் அகமத் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து கொஞ்சம் எளிமையான இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த அனுபவம் இல்லாத ஆப்கானிஸ்தான் அணிக்கு அனுபவ வீரர்கள் நூர் அலி ஜட்ரான் 39, குல்பதின் நைப் 26* ரன்கள் எடுத்துக் கொடுக்க, 17.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி ஆசிய விளையாட்டுப் போட்டி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று தற்போது வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறது. நாளை இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி விளையாடுகிறது.

இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு தங்கப்பதக்கமும், தோற்கும் அணிக்கு வெள்ளி பதக்கமும் கிடைக்கும். அரை இறுதி போட்டிகளில் தோற்ற பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் மோதிக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது!