ஆசியன் கேம்ஸ் 2023.. ருதுராஜ் கேப்டன்ஷியில் இந்திய அணி.. பாக் உடன் மோதுமா?.. அட்டவணை முழு விவரங்கள் இதோ!

0
7439
Ruturaj

டி20 கிரிக்கெட் வடிவம் கிரிக்கெட்டை வணிக ரீதியாக மிகப்பெரிய உயரத்தில் கொண்டு வைத்திருக்கிறது. இதன் மூலம் கிரிக்கெட் மிகப்பெரிய பொருளாதாரம் ஈட்டும் விளையாட்டாக மாறி இருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் டி20 கிரிக்கெட் வந்ததற்கு பிறகு, கிரிக்கெட் இதுவரை சென்றடையாத நாடுகளை எல்லாம் சென்றடைந்து இருக்கிறது.

- Advertisement -

இந்த வடிவத்தை விளையாடுவதற்கு நீண்ட வடிவங்களைப் போல் மிகத் திறமை தேவையில்லை. எனவே வரையறுக்கப்பட்ட திறமைகளோடு ஒரு அணியை உருவாக்குவது எளிமையாக இருக்கிறது. மேலும் நேரமும் குறைவாகத் தேவைப்படுகிறது.

இதன் காரணமாக கிரிக்கெட்டில் இந்த வடிவத்தின் பாய்ச்சலை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதன் காரணமாகத்தான் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை என அருகருகில் இந்த வடிவத்திற்கு உலகக் கோப்பை தொடர் நடத்தப்படுகிறது.

மேலும் தற்பொழுது சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் டி20 வடிவத்தில் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற ஆசிய போட்டியில் கிரிக்கெட் இடம் பெற்று இருந்தாலும், இந்திய கிரிக்கெட் வாரியம் தனது அணியை அனுப்பவில்லை.

- Advertisement -

இந்த முறை ஆண்கள் டி20 கிரிக்கெட் அணியை ருதுராஜ் தலைமையிலும், பெண்கள் கிரிக்கெட் அணியை ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலும் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்பி வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணி நேரடியாக கால்இறுதியில் விளையாடுகிறது. இந்தியா மாதிரி பாகிஸ்தான் பங்களாதேஷ் இலங்கை ஆகிய அணிகளும் கால்இறுதியில் நேரடியாக விளையாடுகின்றன.

இந்திய அணி தனது முதல் போட்டியை அக்டோபர் மூன்றாம் தேதியும், அதில் வெற்றி பெற்றால் அரையிறுதி போட்டியை அக்டோபர் ஆறாம் தேதியும், அதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டியை அக்டோபர் 7ஆம் தேதியும் விளையாடுகிறது.

மேலும் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்தியா அணி விளையாடுவதற்கு அரை இறுதியில் வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் இறுதிப் போட்டியில் வாய்ப்பு இருக்கிறது. இரண்டு போட்டிகளிலும் சந்திக்காமல் போவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு!